திண்ணை பிரச்சாரம்: திமுக மகளிரணிக்கு கனிமொழி புதிய டாஸ்க்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும் துரோகங்கள் குறித்து பெண்கள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2024, 04:31 PM IST
  • பாஜக ஆட்சிக்கு வந்தால் உரிமைதொகை கிடைக்காது
  • வீடுவீடாக சென்று பெண்கள் பிரச்சாரம் செய்யுங்கள்
  • தூத்துக்குடியில் திமுக மகளிரணிக்கு கனிமொழி வேண்டுகோள்
திண்ணை பிரச்சாரம்: திமுக மகளிரணிக்கு கனிமொழி புதிய டாஸ்க் title=

தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அவர் பேசும்போது, தமிழ்நாடு அரசு மகளிருக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். 

மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!

தொடர்ந்து பேசிய கனிமொழி, “மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி வந்தால் தமிழக அரசு மகளிர்காகாக வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடியாது. அவர்கள் வேண்டுமென்றே இந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்த முடியாத வகையில் நிதி நெருக்கடியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி விடுவார்கள். இதுகுறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல திமுக மகளிரணி திண்ணை பிரச்சாரம் மட்டும் இல்லாமல் தனி நபர் பிரச்சாரத்திலும்  ஈடுபட வேண்டும். தங்களது உறவினர்களுடன் பேசும்போதும் அரசியல் பேசுங்கள்” என கேட்டுக் கொண்டார். 

மேலும், “ இந்த நாட்டின் கைகளை உயர்த்துவது பெண்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. எனவே அத்தனை பேரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கைத் தரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் உயரும்” என்றும் கனிமொழி கருணாநிதி பேசினார். திண்ணை பிரச்சாரம் திமுகவின் ஆரம்பகால பிரச்சார யுக்திகளில் ஒன்றாகும். வீடுவீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்களையும் நோக்கங்களையும் எடுத்துரைத்து மக்களுக்கு புரியவைத்து, வாக்காளர்களை ஈர்க்கும் பிரச்சார யுக்தியாகும். இந்த யுக்தியை தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகளிரணியை சேர்ந்த பெண்கள் கையில் எடுக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தி இருக்கிறார். 

மேலும் படிக்க | விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் - பறிபோகும் எம்எல்ஏ பதவி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News