வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்

kodaikanal : கொடைக்கானலில், 2 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவனாக இயற்கை விவசாயம் செய்து அசத்தும் பட்டதாரி இளைஞரை கண்டு, விவசாயிகளே பிரமித்து அசந்து போயிருக்கிறார்கள்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Aug 6, 2022, 04:00 PM IST
  • தனி ஒருவனாக மலைபகுதியில் இயற்கை விவசாயம்
  • நடு காட்டில் குடில் அமைத்து வாழ்க்கை
  • இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் பட்டதாரி
வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்  title=

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் 26 வயதான நந்தகுமார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மலைப்பகுதியில் விளையக்கூடிய‌ மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், மலைப்பூண்டு,மலை வாழை, கொத்த மல்லி உள்ளிட்டவற்றை ஆடு மற்றும் மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு தனி ஒருவனாக விவசாயம் செய்து அச‌த்தி வருகிறார். மேலும் இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் இணைந்து மலை தேனை எடுத்து விற்பனை செய்து வருகிறார். 

kodaikanal,kudil,agriculture,Tirupattur,கொடைக்கானல்,இயற்கை முறை விவசாயம்

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ ஆசைப்பட்ட நந்தகுமார், விவசாய தோட்ட‌ப்பகுதியின் நடுவே மலைக்கிராமத்தில் கிடைக்கக்கூடிய மூங்கில்,செம்மண் கொண்டு சிறிய குடில் அமைத்து வாழ்கிறார். மேலும் மின்சார சேமிப்பை உணர்த்தும் வகையில் குடில் உட்புறத்திலும்,வெளிப்புறத்திலும் விளக்கு மாடங்கள் அமைக்கப்பட்டு அகல்விளக்கு மூலம் வெளிச்சம் ஏற்படுத்துகிறார். தோட்டத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு மண் அடுப்பில் விறகு மூலம், தீ மூட்டி மண் பானையில் உணவு சமைத்து உட்கொள்கிறார்.

kodaikanal,kudil,agriculture,Tirupattur,கொடைக்கானல்,இயற்கை முறை விவசாயம்

நந்தகுமாரின் குடிலில் பித்தளை பாத்திரங்கள், மூங்கிலால் பின்னப்பட்ட கைவினை பொருட்கள்,கை உலக்கு,ஆட்டு கல்,மண் குவளைகள்,சுர குடுக்கை உள்ளிட்ட பழமை பொருட்களை காட்சிப்ப‌டுத்தியுள்ள‌துட‌ன் அவைக‌ளை த‌ற்போது வ‌ரை பயன்படுத்தியும் வருகிறார். மேலும், குடிலில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் ஓவியங்களும் வ‌ரைய‌ப்ப‌ட்டுள்ள‌து. 

kodaikanal,kudil,agriculture,Tirupattur,கொடைக்கானல்,இயற்கை முறை விவசாயம்

நந்தகுமாரின் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கை முறை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயற்கை முறைப்படி விவசாயம் செய்த காய்கறிகளை உண்பதனால் பொதுமக்கள் ஆரோக்கியத்துடனும், மன வலிமையுடனும்  நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உதவும் என்று நந்தகுமார் கூறுகிறார். 

kodaikanal,kudil,agriculture,Tirupattur,கொடைக்கானல்,இயற்கை முறை விவசாயம்

மேலும் இயற்கை முறைப்படி விவசாயம் செய்வதில் சீரான விளைச்சல் இருப்பதாகவும் அத‌னால் நல்ல வருவாய் கிடைப்பதாகவும் நந்தகுமார் தெரிவிக்கிறார். மேலும் இது போன்று, தற்போது உள்ள தலைமுறையினர், இயற்கை முறைப்படி விவசாயம் செய்வதனால், ஆரோக்கியமான அடுத்த தலைமுறையின‌ரை உருவாக்கலாம் எனவும் கூறுகிறார். தற்போது, இதன் காரணமாக இய‌ற்கை விவசாய‌ம் செய்ய‌ இன்றைய இளைஞர்களுக்கு நந்தகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | ஸ்கேட்டிங் விழிப்புணர்வு : குமரி டூ காஷ்மீர் - கிட்ட நெருங்குகையில் உயிரிழந்த இளைஞர்!

தற்போது படித்த பட்டதாரி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு துறையில் பணிபுரிந்து வரும் நிலையில்,பண்டைய காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை மீட்பதற்காக நந்தகுமார், இந்த இயற்கை வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். 

மேலும் படிக்க | கலைஞர் 4-ம் ஆண்டு நினைவு நாள்: தேசியக் கொடியை ஏற்றிய ‘முதல்’ முதலமைச்சரின் கதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News