தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்! விஜய் பட காட்சிகள் பதிவேற்றம்

TN Department of School Education FB Account Hacked : தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2024, 03:52 PM IST
  • தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்
  • மாஸ்டர் பட காட்சிகள் பதிவேற்றம்
  • டிஜிபி அலுவலகத்தில் புகார்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்! விஜய் பட காட்சிகள் பதிவேற்றம் title=

TN Department of School Education FB Account Hacked : தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில மணி நேரங்களாக, இந்த கணக்கில் இருந்து வினோதமான பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விஜய் நடித்துள்ள, மாஸ்டர் படத்தின் காட்சிகள், இந்த முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

ஃபேஸ்புக் பக்கம் ஹேக்:

தமிழக அரசு, சில முக்கிய துறைகளுக்கு சமூக வலைதளங்களில் கணக்குகளை உருவாக்கி அதில் முக்கிய அப்டேட்டுகளை பதிவிட்டு வருகிறது. அந்த வகையில், பள்ளிகல்வித்துறைக்கும் ஒரு முகநூல் கணக்கை வைத்திருக்கிறது. இதில், அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிவிப்புகள் வெளியாகும். மாணவ-மாணவிகள் செய்த சாதனைகள், பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாகும். இப்படித்தான் இந்த முகநூல் பக்கம் இத்தனை நாட்களக இயங்கி வருகிறது. ஆனால், இன்று இந்த கணக்கில் சில வினோதமான நடவடிக்கைகள் காணப்பட்டன. 

மேலும் படிக்க | மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... மூன்று நாள் சுற்றுப்பயணம்!

மாஸ்டர் பட காட்சிகள் பதிவேற்றம்:

விஜய் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம், மாஸ்டர். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள், தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அதிலும், அந்த காட்சிகள் அனைத்துமே இந்தி மொழியில் டப் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அதில், #Metaverse, #Superhit, #Vijay போன்ற ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்த்த மக்கள், அதிர்ந்து போயுள்ளனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முகநூல் பக்கத்தை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே தற்போது “இந்த அக்கவுண்டிற்கு என்ன ஆச்சு?” என குழப்பத்தில் இருக்கின்றனர். முகநூல் பக்கத்தை ஹேக் செய்தவர்கள், பயனாளரின் பெயர், பையோ ஆகியவற்றை எதுவும் செய்யவில்லை. விஜய் பட காட்சிகளை பதிவிட்டுள்ள அவர்கள், இதற்கு முன்னர் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த வீடியோக்கள் எதையும் ஒன்றும் செய்யவில்லை. 

DGP அலுவலகத்தில் புகார்!

முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | பொன்முடி எம்எல்ஏவாக தொடர வாய்ப்பு... தண்டனை நிறுத்தி வைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News