Captain Vijayakanth Funeral Live Updates in Tamil: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (டிச. 28) காலை உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் நேற்று காலை உயிரிழந்தாக மியாட் மருத்துவமனை விளக்கம் அளித்தது. தொடர்ந்து, அவர் நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்ததாக தேமுதிக தலைமை உறுதிப்படுத்தியது.
அதை அடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்த நிலையில், கூட்ட நெருக்கடியை கட்டுப்படுத்தும் விதமாக அவரது உடலை தீவுத்திடலுக்கு கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டது.
அதன்பேரில் இன்று காலை அவரின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பல பிரபலங்களும், மக்கள் கூட்டமும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மதியம் 3 மணியளவில் ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக எடுத்துவரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 5.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.