Alanganallur Jallikattu 2023 Live Updates: பொங்கல் பண்டிகையின் நான்காவது நாள் மற்றும் கடைசி நாள், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை கண்ணு பொங்கல் என்றும் அழைகின்றனர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணும் பொங்கல் கரிநாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்நாளில் மக்கள் சூரியக் கடவுளை வழிபட்டு உணவு மற்றும் சர்க்கரைப் பொங்கலை இடுவார்கள்.
வாழ்க்கையில் இனிமை மற்றும் மகிழ்ச்சியைப் முன்னிலைப்படுத்த, தெய்வத்திற்கு கரும்பு அர்ப்பணிக்கப்படுகிறது. மேலும், அவரை தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடையே பரிமாறப்படுகிறது. காணும் பொங்கலின் போது, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் தொலைதூர உறவினர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும், கடற்கரை, அருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் சென்று தங்களின் அன்புக்குரியவர்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தை மேற்கொள்வார்கள். இதனால், இன்று பல்வேறு இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
குறிப்பாக, மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இன்று காலை 8 மணியளவில் உதயநிதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைப்பார் என கூறப்பட்டது.
மதுரையின் மற்ற பகுதிகளான அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே நேற்று முன்தினம், நேற்று நடைபெற்றன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும், நேற்றைய ஜல்லிக்கட்டில் பாலமேடைச் சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவர் காளை முட்டியதில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். அதேபோல திருச்சி சூரியூரில் பார்வையாளர் அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.
காணும் பொங்கல் கொண்டாட்டம், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்த உடனடி செய்திகளை இங்கு காணலாம்.