Pongal 2023 Festival Live Updates: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கான, விவசாயிகளுக்கான, விவசாயத்துக்கு உதவும், சூரியன், பூமி, விலங்குகள், இவற்றுக்கான பண்டிகையாகும்.
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை இந்த தை மாதத்தில் அறுவடை செய்வோம். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்து, மஞ்சள் கொத்து கட்டிய புதுப் பானையிலிட்டு, புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் படைப்பது தைப்பொங்கல் திருவிழாவின் முக்கிய செயல்பாடாகும்.
மேலும், தமிழர்களின் பண்பாடு சார்ந்த விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. அந்த வகையில், பொங்கல் கொண்டாட்டங்கள் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் இங்கு அறிந்துகொள்ளலாம்.