’விளம்பரத்துக்கு வழக்கு தொடுக்கிறீங்களா? ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்யுங்க’ அதிரடி உத்தரவு

விளம்பரத்துக்காக வழக்கு தொடுப்பதாக கூறி வழக்குத் தொடுத்தவர் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2023, 04:46 PM IST
  • விளம்பரத்துக்காக வழக்கு தொடுக்குறீங்களா?
  • உண்மை தன்மையை ஒரு லட்சம் செலுத்தி நிரூபியுங்கள்
  • சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
’விளம்பரத்துக்கு வழக்கு தொடுக்கிறீங்களா? ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்யுங்க’ அதிரடி உத்தரவு title=

நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் என்ற பெயரில் தொடுக்கப்படும் வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை கடுமைகாட்டத் தொடங்கியிருக்கின்றன. வேண்டுமென்றே விளம்பரம நோக்கத்துக்காகவும், நீதிமன்றத்தின் நேரத்தை செலவிடுவதற்காகவும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களை சிலர் பயன்படுத்துவதாக கூறியதுடன் அத்தகைய வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கூட, அண்மையில் வழக்கு தொடுத்தவருக்கு அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: சரசரவென சரிந்தது தக்காளியின் விலை! ஒரு கிலோ இவ்வளவு கம்மியா?

அதேபோன்றதொரு கோபத்தை சென்னை உயர்நீதிமன்றமும் வழக்கு ஒன்றில் காண்பித்துள்ளது. ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தம் செய்யக் கோரி சென்னை வழக்கை தாக்கல் செய்தவர், தனது உண்மைத் தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டிபாசிட் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நாட்டில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும் வகையில் உள்ள சட்டங்களை கடுமையாக்கும் வகைவகையில் திருத்தம் செய்யக்கோரி மத்திய சட்ட ஆணையம், மாநில சட்ட ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்ககோரி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த சட்டங்களில் என்ன திருத்தம் செய்ய வேண்டும்? நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டு வர விரும்புகிறீர்களா?. தற்போதைய சட்டம் திறமையானதல்ல என எப்படி சொல்கிறீர்கள்? என மனுதாரருக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு பொது நலனுடன் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை, விளம்பர நல வழக்காகவே தெரிகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், வழக்கு தொடர்ந்த மனுதாரர், தனது உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாயை இரு வாரங்களில் டிபாசிட் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News