தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை கடந்த சில மாதங்களில் தாறுமாறாக ஏறியது. சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில், தக்காளி ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வந்தது.
தக்காளி விலையில் மாற்றம்:
தமிழ்நாாட்டில், தக்காளியின் வரத்தை பொறுத்து அதன் விலை ஏறுமுகம் இறங்குமுகமாய் இருக்கிறது. தக்காளி விலை குறைந்து விட்டது என்று நம்பி மறுநாள் கடைக்கு சென்றால், அப்போது அதன் விலை வேறாக இருந்து வந்தது. இன்று இருக்கும் தக்காளி விலை நாளை இருப்பதில்லை என்பதால் மக்கள் அவதியுற்று வந்தனர். ஒரு கிலோவிற்கு 30-40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, சில நாட்களுக்கு முன்பு வரை சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக தக்காளியின் விலை பல்வேறு பகுதிகளில் படிப்படியாக குறைந்து வருகிறது. முதல் தரம், இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தரங்களை பொருத்து தக்காளியின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.
மேலும் படிக்க | மக்களுக்கு குட் நியூஸ்: தொடர் சரிவில் தக்காளி விலை-ஒரு கிலோ 30 ரூபாய்தான்..!
இன்றைய விலை நிலவரம்:
இந்த வாரத்தின் தொடக்கத்தில் கோயம்பேடு சந்தையில் தக்காளி, கிலோ ஒன்றிற்கு 90 ரூபாயாக விற்கப்பட்டது. நேற்று முன்தினம் விலை ஏதும் மாறாமல் அதே 90 ரூபாய்க்கே விற்க்கப்பட்டது. முன்னர் இருந்ததை விட, தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதுதான் இந்த விலை மாற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, தக்காளியின் விலை 20 ரூபாய் குறைந்து கிலோ ஒன்றிற்கு 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரண்டாம் ரக தக்காளி, 60 ரூபாய்க்கு மூன்றாம் ரக தக்காளி 30 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்று, இதன் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று 700 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு வந்திறங்கிய நிலையில், இன்று அதன் வரத்து 750 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த பட்சமாக இதன் விலை 20,50 மற்றும் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
விலை குறைய வாய்ப்பு:
தக்காளியின் வரத்து மழை, வெள்ளம், பூச்சி பிரச்சனை இவற்றால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், இதன் விலை தொடர்ந்து உச்சியில் இருந்து வந்தது. தற்போது அந்த நிலை சீர் செய்யப்பட்டுள்ளதால் படிப்படியாக விலை குறையும் என கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து அதிகரித்து காணப்படுவதால், கண்டிப்பாக தக்காளியின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்கறி விலை நிலவரம்:
கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ.
>பெரிய வெங்காயம் கிலோ ஒன்றிற்கு சுமார் 25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
>அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாயாக விற்கப்படுகிறது.
>கேரட் ஒரு கிலோவுக்கு 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் ஒரு கிலோவிற்கு 100 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் விலையில் பல நாட்களாக மாற்றம் இல்லை.
>சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 33 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
>பச்சை குடைமிளகாய் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் கிலோவிற்கு 160 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ