மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் ஓபிஎஸ்க்கு ஆதரவு!

Last Updated: Friday, February 17, 2017 - 14:21
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் ஓபிஎஸ்க்கு ஆதரவு!
Pic courtsey: @NatarajIpsR

சென்னை: ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிப்பதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதிமுக கட்சியானது சசிகலா அணி, ஓ. பன்னீர்செல்வம் அணி என்று இரண்டு அணியாக பிளவுபட்டுள்ளது. 
முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

இந்நிலையில் இதுவரை யாருக்கு ஆதரவு என்று சொல்லாமல் இருந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சிதாவல் சட்டத்தால் எம்.எல்.ஏ., பதவி போனாலும் பரவாயில்லை என்று நட்ராஜ் கூறியுள்ளார். 

comments powered by Disqus