நாமக்கல் : சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2024, 04:05 PM IST
  • நாமக்கல் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு
  • 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
  • இன்னும் 18 பேர் மீது வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது
நாமக்கல் : சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை title=

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான 13, 12 வயது சிறுமிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும் படிக்க | Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிவா (எ) சங்கர் (26), சண்முகம் (45), ஊமையன் (எ) முத்துசாமி (75), மணிகண்டன் (30), சூர்யா (23), செந்தமிழ்ச்செல்வன் (31), வரதராஜ் (எ) சேலத்தான் (61) உள்பட 12 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சிவா (எ) சங்கர், வரதராஜ் (எ) சேலத்தான் ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இதையடுத்து இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தனித்தனியாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இருவர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மீதமுள்ள 10 பேர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இருவர் 18 வயதுக்கு குறைவானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News