ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதலா இல்லையா? ஆளுநரை சந்தித்த பிறகு ரகுபதி விளக்கம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 1, 2022, 01:10 PM IST
  • ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
  • அவர் ஒப்புதல் அளிக்க பலரும் வலியுறுத்தல்
  • இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதலா இல்லையா? ஆளுநரை சந்தித்த பிறகு ரகுபதி விளக்கம் title=

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். பலர் பணத்தை இழந்து செய்வதறியாது நெருக்கடியில் சிக்குகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலில் அது காலாவதியாகியிருந்தது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர், சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார். ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.

மேலும் படிக்க | கோகுல்ராஜ் கொலை வழக்கு.... வாய் திறக்காத சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

மேலும் படிக்க | தனியார் பள்ளியில் ஓடிய ஆபாச வீடியோ! புகார் அளித்த மாணவியை மிரட்டிய தலைமை ஆசிரியர்

மேலும் படிக்க | "எல்லாம் மெண்ட்டலாகத்தான் இருங்காங்க" ஆர்எஸ் பாரதியின் சர்ச்சைப் பேச்சு - பாஜகவின் பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News