காதலை கண்டித்த பெற்றோர் : மாணவி தற்கொலை..!

காதல் விவகாரத்தால் மாணவி ஒருவர் நீட் தேர்வு பயிற்சி மைய விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 2, 2022, 08:19 PM IST
  • காதல் விவகாரத்தால் மனமுடைந்த மாணவி
  • நீட் தேர்வு பயிற்சி மைய விடுதியில் தற்கொலை
  • போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
காதலை கண்டித்த பெற்றோர் : மாணவி தற்கொலை..!   title=

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இங்கு கோவை, சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கும் அதே பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் இருவரையும் கண்டித்ததாகவும், மாணவரை மட்டும் அவரின் பெற்றோர் பயிற்சி மையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி, விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு: பெண் மருத்துவர் தற்கொலை! என்ன நடந்தது? #Justice_For_Dr_Archana

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News