பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததால் பெண் மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை!
ராஜஸ்தான் மாநிலத்தில் கணவருடன் சேர்ந்து மருத்துவமனை நடத்தி வந்தார் அர்ச்சனா ஷர்மா. பெண்கள் நல மருத்துவரான அர்ச்சனாவின் மருத்துவமனைக்கு நேற்று பிரசவத்திற்காக கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அர்ச்சனா தான் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரசவத்தின் போது கர்ப்பிணிப் பெண் உடல் நிலை மோசமானதால் உயிரிழந்துள்ளார்.
Archana Sharma committed suicide because she was being harassed by Local MLA and his supporters
She was brilliant doctor she was gold medalist ,
Raise her voice for justice
Justice For Dr Archana#Justice_For_Dr_Archana pic.twitter.com/a20yI5jz8x— Vivek Shukla (@Gajraj_Vivek) March 30, 2022
இதனையடுத்து மருத்துவரின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையின் முன் போராட்டம் நடத்தினர். அதோடு மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது லாக்சோட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சனா கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இன்று மருத்துவமனையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் படிக்க | Viral Video: பணம் கேட்டு மிரட்டல்... திமுக கவுன்சிலரின் கணவரை தெறிக்கவிட்ட பெண்!
அவர் எழுதியுள்ள கடிதத்தில் தேவையில்லாமல் அப்பாவி மருத்துவர்களை வன்கொடுமை செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ட்விட்டரில் மருத்துவர் அர்ச்சனாவுக்கு நியாயம் கேட்டு பல மருத்துவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மருத்துவரை விசாரிக்காமல் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். #Justice_For_Dr_Archana என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR