இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. ஒரு லிட்டர் 100 ரூபாயை சில நாள்களில் எட்டும் என்ற நிலை உள்ளது. ஒன்றிய அரசு வரியைக் குறைக்காத நிலையில் மக்களின் தலையில் பெரும் சுமை சேர்ந்துள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்., மத்திய அரசு பெட்ரோல் (Petrol Price), டீசல் விலையை (Diesel Price) கடுமையாக உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதும் முந்தைய திமுக அரசு வரியை குறைத்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். மேலும் விரைவில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
ALSO READ | MK Stalin உறுதி அளித்தது போல் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை
மேலும் பேசிய அவர்., பெட்ரோல் மீது ரூபாய் 10 ஆக இருந்த வரியை ஒன்றிய அரசு 32.90 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. தமிழக அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் மூலம் வருவாய் குறைவாகவே உள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது, அதேபோல் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி தொகையை முறையாக தரவில்லை. எனவே தற்போது தமிழ்நாடு அரசால் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ALSO READ | எத்தனால் கலந்த எரிபொருள் திட்டம் குறித்து பிரதமர் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR