பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு ‘குட்-பை’ - வண்டலூர் பூங்கா அதிரடி நடவடிக்கை

Vandalur Zoo Park : சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பல்வேறு அதிரடி முடிவுகளையும், மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது வண்டலூர் உயிரியல் பூங்கா.  என்னென்ன தடை ? என்னென்ன மாற்றங்கள் ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 6, 2022, 09:23 PM IST
  • பருவநிலை மாற்றம் குறித்த சவால்கள்
  • புதிய ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ளும் வண்டலூர் பூங்கா
  • பிளாஸ்டிக், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு ‘குட்-பை’ - வண்டலூர் பூங்கா அதிரடி நடவடிக்கை  title=

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் கையிலெடுத்து வருகிறது. பருவ நிலை மாற்றம் குறித்தான உரையாடல்கள் உலகமெங்கும் வலுப்பெறத்தொடங்கியுள்ளன. உலக நாடுகளில் நிகழும் இயற்கை சீற்றங்களை கணிக்க முடியாத அளவுக்கு பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்துள்ளன. தொழில்நுட்பங்கள் வளர்ந்த அதே நேரம் இயற்கைக்குண்டான மரியாதையை அளிக்க மனிதச்சமூகம் மறந்து வருகிறது. வளரும் நாடுகள் இந்தப் பிரச்சனையை உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கையாக கையாளத் தொடங்கிவிட்டது. 

குறிப்பாக இந்தியா, பருவ நிலை மாற்றம் குறித்து மிகத் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் மரம் நடும் பணி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை சார்பாக தொடங்கப்பட்டுவிட்டது. தனியார் தொண்டு நிறுவனங்களும் இந்த விவகாரத்தில் அரசுடன் கைக்கோர்த்துள்ளன.

மேலும் படிக்க | சுட்டெரிக்கும் வெயிலா இருந்தா என்ன: மண் குளியல் போடும் யானைகளின் வீடியோ வைரல்

அரசு சார்ந்த சுற்றுலாத் தளங்களில் தூய்மைக்கான கவனம் முதலிடத்தை பிடிக்கும் அளவுக்கு உத்தரவுகள் பறக்கின்றன. ஆரோக்கியமான நல்ல முயற்சியாக பார்க்கப்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்பின்றி எதுவும் சாத்தியமில்லைதானே. தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வண்டலூர் பூங்காவும் ஓர் அடி முன்னே எடுத்து வைத்திருக்கிறது. பூங்காவிற்குள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முற்றிலும் எடுத்துச்செல்லக் கூடாது என்ற தடையில்லை. யதார்த்ததைக் கணக்கில் கொண்டு புதிய முயற்சியை பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

அதாவது, வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் ரூ.10 வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 10 ரூபாய் பெறப்படும். அங்குள்ள கடைகளில் 10 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கினாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக 10ரூபாய் முன்பணமாக பெற்றுக்கொள்ளப்படும். உள்ளே சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் வந்து ஸ்டிக்கர் ஒட்டிய பிளாஸ்டிக் பாட்டிலை ஒப்படைத்துவிட்டு பத்து ரூபாயை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

மேலும் இந்த ஆண்டு உலக சுற்றுசூழல் தினம் "ஒரே ஒரு பூமி" என்ற கருப்பொருளுடன் கொண்டாடுகிறது. டப்படுகின்றது. இதனையொட்டி உயிரியல் பூங்காவின் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து "ஒரு நபர் ஒரு மரம்" என்ற நோக்கத்துடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் தணிப்பு மற்றும் பூங்காவில் பசுமையான சூழலை மேம்படுத்தும் விதமாக வண்டலூர் பூங்கா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | காட்டுத்தீ...வெயில்...மிருகங்களின் தாகம்...! வனத்துறை சந்திக்கும் சவால்கள்

உயிரியில் பூங்காவில் உள்ள 350 பணியாளர்களும் ஒரு மரத்தை நட வேண்டும். அந்த மரக்கன்றுகளை அந்தந்த பணியாளர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிலையான மேலாண்மை நடைமுறையை நோக்கி, பூங்காவில் இருக்கும் நீர்தொட்டிகளில் மீன் வளர்ப்பு முயற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சி பூங்காவிற்குள் இருக்கும் நீர் பறவைகள் மற்றும் முதலைகளின் அன்றாட மீன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News