Amazing Mud bath of Elephants video goes viral: அக்கினி வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. நாட்டில் இருப்பவர்கள் செயற்கையாக குளிரூட்டும் உபாயங்களை பயன்படுத்தலாம். மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், காட்டில் இருக்கும் விலங்குகள், கோடையின் கடுமையான வெப்பத்தை தாங்குமா? அவையும் நம்மைப் போலவே, தங்கள் சொந்த வழியில் வெப்பத்தை வெல்ல முயற்சிக்கின்றன.
கொளுத்தும் கோடையில் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக யானைகள் கூட்டம் சேற்றில் இறங்கி அதகளம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவில் ஒரு சிறிய குளம் அருகே யானைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. பெரிய யானை, குட்டி யானை என அனைத்து யானைகளும் சேற்றில் நனைந்துள்ளன.
மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்
உடலை குளிர்விப்பதற்காக யானைகள் தங்கள் காதுகளை மடக்குவதைக் காணமுடிகிறது. குட்டி யானைகள் உருண்டு, புரண்டு விளையாடுகின்றன. இது குதூகலமாக வெப்பத்தை வெல்லும் வழியாக தோன்றுகிறது.
யானைகள் வெயிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், விளையாடுவதற்கும் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வழி, அவற்றுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பது இந்த வீடியோவில் தெரிகிறது.
சேற்றில் உள்ள விலங்குகளைப் பார்த்தால், குழந்தைத்தனமாய் இப்படி விளையாடும் யானைகளுக்கா மதம் பிடிக்கும் என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது.
இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சிலர் வேடிக்கையாக இப்படித்தான் வெப்பத்தைக் எதிர்கொள்கிறார்கள்!!” என்று அவர் வீடியோவுடன் எழுதியுள்ளார்.
இந்த வீடியோ, ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச், பரிபாடா பிரிவு, ராஸ்கோவிந்த்பூர் வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
This is called as wallowing. Elephants love to do that. It keeps them cool.
Elephants don’t have sweat glands but have high volume to surface area ratio and hence heat is generated.
So heat dissipation in this manner or by flapping their ears is very important.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 2, 2022
மற்றொரு ட்வீட்டில், இந்தச் செயலை யானைகள் செய்வதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். ”இது வால்விங் என்று அழைக்கப்படுகிறது. யானைகள் அதை விரும்புகின்றன. அது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வழியாகும். யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை, அதனால் அவற்றின் சருமத்தில் அதிக அளவு வெப்பம் உருவாகிறது. எனவே அவை இப்படி தங்களின் காதுகளை மடக்கி வெப்பச் சிதறல் செய்கின்றன. இது மிகவும் முக்கியமானது” என்று அவர் எழுதியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, வைரல் வீடியோவுக்கு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நெட்டிசன்கள், இதய ஈமோஜிகள் மூலம் யானைகள் மீது அன்பைப் பொழிகின்றனர்.
ஒரு பயனர் எழுதினார், ”பார்க்க வேண்டிய காட்சி !! இந்த மென்மையான விலங்குகளை அவர்களின் இயற்கையான சூழலில் பார்ப்பது அற்புதமாக இருக்கிரது. அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வது மிகவும் அவசியமானது”.
The small elephant are so so cute. Melts the heart to watch them wallowing and having fun. https://t.co/QNq0Fc98EL
— Damayanti Ganguly (@IndiaDamayanti) May 3, 2022
யானைகளின் குதூகலத்தைப் பார்த்து குதூகலமான மற்றொருவர், ”இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி. என்ன அற்புதமான காட்சி!" என்று நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; மன பதற வைக்கும் காட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR