PM Narendra Modi Visit in Chennai Latest Updates: கேலோ விளையாட்டு தொடர் தொடங்கிவைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக தமிழ்நாட்டில் மூன்று நாள்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தடைந்தார். பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பிரதமர் மோடிக்கு வரவேற்பு
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், தாமாக தலைவர் ஜி.கே. வாசன், புதிய நிதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா, பாஜக எம்எல்ஏக்கள் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நகேந்திரன் ஆகியோரும் பிரதமரை நேரில் வரவேற்றனர்.
சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தடைந்தார். ஐஎன்எஸ் அடையார் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கிருந்து சிவானந்தா சாலை வழியாக கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். சிவானந்தா சாலையில் இருந்து பல்லவன் சாலை வரை இரு பக்கங்களிலும் பொதுமக்கள் நிறைந்து நின்று பிரதமரை வரவேற்று வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆன்மீகப் பயணம்: தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரவேற்க தயாராகும் தமிழக அரசு
#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Chennai, Tamil Nadu.
PM will inaugurate the opening ceremony of the Khelo India Youth Games 2023 in Chennai. pic.twitter.com/r4cBPyeNWo
— ANI (@ANI) January 19, 2024
கேலோ இந்தியா விளையாட்டு தொடர்
பெரிய மேடு பகுதியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடரை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடரின் தொடக்க விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒன்றிய இணைய அமைச்சர் நிஷித் பிரமானிக், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய கீதத்துடன் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடரின் தொடக்க விழா தொடங்கியது. பின்னர், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோலோ இந்தியா தொடரின் நினைவுப்பரிசை வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவி, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒன்றிய இணை அமைச்சர் நிஷித் பிரமானிக், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு நினைவுப்பரிசை வழங்கினார். நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் தொடக்க உரை ஆற்றினார். அனுராக் தாக்கூர், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் நிகழ்வில் உரை ஆற்றினர். பிரதமர் மோடியும் 'வணக்கம் சென்னை' என்று கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும், டிடி தமிழ் தொலைக்காட்சி சேனலின் லோகோ பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக, டிடி பொதிகை என்ற பெயரை டிடி தமிழ் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் 12 பண்பலை அலைவரிசைகளுக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்த பின்னர், கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை மற்றும் நாளை மறுதினம் திருச்சி மற்றும் ராமநாதபுரத்திற்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.
மேலும் படிக்க | ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ