ஓணம் பண்டிகை: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 21, 2021, 10:51 AM IST
  • பிரதமர் நரேந்திர மோடி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓணத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஓணம் பண்டிகை: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து title=

இன்று ஓணம் பண்டிகை கேரளத்திலும், நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என பலர், ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்கள். 

இது குறித்து "ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் பண்டிகை, நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், நேர்மறை எண்ணங்களையும், விதைக்க கூடியது. இந்த திருநாளில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார் மோடி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்தில் "அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள்! மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார்.

ALSO READ | Gold Rate Today: வரலட்சுமி விரத நாளன்று தங்கம் விலை குறைந்ததா? கூடியதா?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும், வெள்ளிக்கிழமை ஓணத்தை முன்னிட்டு குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஓணம் பண்டிகை சமுதாயத்தில் நல்லிணக்கம், அன்பு மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கிறது என்று கூறிய குடியரசுத் தலைவர், "ஓணம் பண்டிகையையொட்டி, அனைத்து இந்திய குடிமக்களுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் கேரளாவின் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News