அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனை

துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனையாக தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 18, 2023, 02:57 PM IST
  • அமைச்சர் பிடிஆர் வேதனை
  • ஜிஎஸ்டி கூட்டம் நடத்த முடியவில்லை
  • மதுரையில் நடத்த திட்டமிட்டிருந்தார்
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனை title=

தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அனுமதியும் பெற்றிருந்தார். ஆனால், அதன்பிறகு நடந்த அரசியல் விளையாட்டில் அவரின் நிதியமைச்சர் பதவி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து மாற்றப்பட்டது. இப்போது அவர் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நீடிக்கிறார். இதற்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிடிஆர் பேசியதாக வெளியிட்ட ஆடியோ தான் இப்போது வரை கிசுகிசுக்கப்படுகிறது. 

அந்த ஆடியோவில் முதலமைச்சர் குடும்பத்தை நேரடியாக அவர் குற்றம்சாட்டுவதுபோல் இருந்தது. ஆனால், அது ஏஐ தொழில்நுட்பத்தால் பிடிஆர் பேசியதுபோல் ஜோடித்து வெளியிடப்பட்ட ஆடியோ என விளக்கம் அளிக்கப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அந்த விரக்தியில் இப்போது வரை இருக்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முன்பெல்லாம் பல தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த அவர், ஆடியோ விவகாரம் பூதாகரமான பிறகு பேட்டி கொடுப்பதை முழுவதுமாக குறைத்திருக்கிறார். ஒன்றிரண்டு பேட்டிகள் மட்டும் அண்மையில் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | ராமேஸ்வரம்: மீனவர்கள் மாநாட்டில் 10 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்நிலையில், மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற மதுரை கட்டட பொறியாளர்கள் சங்கம்(ஏ.எம்.சி.இ.,) நடத்தும் இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ 2023' கட்டிட கண்காட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது, கண்காட்சியை திறந்து வைத்த பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் பேசும்போது," மதுரையில் எந்த சாலையில் சென்றாலும் அங்குள்ள கட்டட வளர்ச்சி எந்த ஆண்டில் அந்த கட்டிடம் கட்டப்பட்டது என்பது கண்ணுக்கே வித்தியாசம் தெரியும் அளவிற்கு தான் கட்டுமானம் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

சென்ற ஆண்டு என் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றிய நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலை மதுரைக்கு கொண்டு வருவேன் என உறுதி அளித்து இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை இந்த அரங்கில் நடத்த நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் கொடுத்த தேதி பிப்ரவரியில் என்னால் நடத்த முடியவில்லை. ஏனென்றால் துறை மாறியதால் ஜிஎஸ்டி கவுன்சிலிங் உறுப்பினராக இல்லை. அதனால் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி இங்கு நடத்த முடியவில்லை என்றாலும் கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடத்துவது எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது" என கூறினார்.

மேலும் படிக்க | பயன்படுத்திக்கோங்க பெண்களே... மாதம் ரூ.1000 திட்டம் - அடுத்த 3 நாள் மட்டும் தான் வாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News