திமுக பொதுக்கூட்ட நோட்டீஸில் பிடிஆர் பழனிவேல் தியாகாஜன் பெயர் நீக்கம் - திமுகவில் ஓரங்கட்டப்படுகிறாரா?

மதுரையில் நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட நோட்டீஸில் இருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 8, 2023, 11:10 AM IST
  • திமுகவில் ஓரங்கட்டப்படும் பிடிஆர்
  • நோட்டீஸில் இருந்து பிடிஆர் பெயர் நீக்கம்
  • அமைச்சரவையில் இருந்தும் நீக்க வாய்ப்பு?
திமுக பொதுக்கூட்ட நோட்டீஸில் பிடிஆர் பழனிவேல் தியாகாஜன் பெயர் நீக்கம் - திமுகவில் ஓரங்கட்டப்படுகிறாரா?  title=

தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். முதலமைச்சர் குடும்பம் பற்றி அவர் பேசியதாக வெளியான ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட, அது அரசியல் களத்தில் தீயாக பரவியது. அந்த ஆடியோவில் சபரீசன் மற்றும் உதயநிதி ஆகியோர் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்திருப்பதாக பிடிஆர் கூறுவது போல் இருக்கிறது. இருப்பினும் அந்த ஆடியோ பொய் என அமைச்சர் பிடிஆர் விளக்கமளித்துவிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் இது குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நபர்களுக்கு வீண் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என கூறி ஆடியோ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 

மேலும் படிக்க | ’மிஸ்டர் RN ரவி பயமுறுத்த நினைக்காதீங்க.. உங்க வேலை இங்கு நடக்காது’ - முதலமைச்சர் முக.ஸ்டாலின்

அமைச்சர் பதவிக்கு ஆபத்து

அதனால் அவருடைய அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்படாது என கூறப்பட்ட நிலையில், மதுரையில் நடைபெறும் திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்ட அறிவிப்புகளில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியில் பிடிஆர் பேசுவதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால், அவருக்கு பதிலாக முனைவர் ஜெயரஞ்சன் பேசுவார் என இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆடியோ விவகாரத்தில் திமுக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் படிப்படியாக அவரை ஓரம் கட்டும் வேலைகளில் இறங்கிவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளது. இதில் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது. 

அமைச்சரவை மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை தங்களது துறைகளில் சிறப்பாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பொறுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதன்படி அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்ட 3 பேர் ஹிட் லிஸ்டில் இருக்கிறார்களாம். அவர்களுக்கு பதிலாக டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வகிக்கும் நிதியமைச்சர் பொறுப்பு தங்கம் தென்னரசுவுக்கு கொடுக்கபடலாம் என்றும் பேசப்படுகிறது. 

மேலும் படிக்க | இதுதான் திமுக அரசின் மாஸ்டர் பிளான் - விளக்கம் கொடுத்த மனுஷ்ய புத்திரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News