சென்னை புறநகரில் ரேஸில் ஈடுபட்ட லாரிகள் - நடந்தது என்ன ?

மணிமங்கலம் அருகே லாரிகளுக்குள் நடந்த போட்டி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 6, 2022, 11:14 AM IST
  • மணிமங்கலம் அருகே லாரி ஓட்டுநர்கள் இடையே போட்டி
  • அதிக பாரத்துடன் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக பயணம்
  • ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - போலீஸார் விசாரணை
சென்னை புறநகரில் ரேஸில் ஈடுபட்ட லாரிகள் - நடந்தது என்ன ? title=

சென்னை வண்டலூர் - வாலாஜாபாத் சாலை வழியாக இன்று அதிகாலை ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் சென்றுகொண்டிருக்கின்றன. அதிக பாரத்துடன் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது சாலமங்கலம் அருகே பின்னால் வந்து கொண்டிருந்த லாரி திடிரென முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதில், அருகில் இருந்த தனியார் நிறுவனத்திற்க்கு சொந்தமான  ஐஸ்கிரீம் கம்பெனியின் சுற்றுசுவர் மீது ஒரு லாரி மோதியது. இதில் அந்தச் சுவர் இடிந்து லாரி அங்கேயே கவிழுந்தது. லாரி கவிழ்ந்துவிட்டதால் ஜல்லிக்கற்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இதனால் அதிகாலை நேரத்தில் பெரும் சத்தத்துடன் ஜல்லி மீதான புகையும் கிளம்பியதால் அனைவரும் பதட்டமடைந்தனர். 

மேலும் படிக்க | டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு..!

இதனை கண்ட சாலையில் சென்றவர்கள் உடனடியாக லாரிக்குள் இருந்த லாரி டிரைவர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்கள் இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். காயங்களுடன் இருந்த அவர்கள் இருவரையும் மீட்ட பொதுமக்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலிசார், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். இயல்புக்கு மீறி அதிக பாரத்துடன் ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகளும் வந்துள்ளன. அப்போது இரு டிரைவர்களுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ரேஸ் ஓட்டுவது போல போட்டி போட்டிக்கொண்டு மாறிமாறி முந்த முயன்றுள்ளனர். இதில் கட்டுப்பாட்டை இழந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மணிமங்கலம் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | ஒரே ஒரு அறை! வில் ஸ்மித்தின் பேங்க் அக்கவுண்ட் வரை பாதிப்பு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News