உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு இடையே 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் உள்ளதாகவும், அப்படி உயர்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் எனவும் அரசியல் பிரமுகர்களும், பொருளாதார நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை பெட்ரோல், டீசல் விலையில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்திய எரியெண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கும் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில், மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் டீசல் விலை ரூ. 25 அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை டீசல் விற்பனை நிலையங்களில் குறைவான விலைக்கும் நுகர்வோர் டீசல் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கும் டீசல் விற்பனை செய்திடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நாள்தோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நாள்தோறும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சுமார் 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்துவரும் நிலையில் விலை உயர்வை சமாளிக்க சில்லறை விலையில் டீசல் வாங்குவதற்கு எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையே லாரி உரிமையாளர்கள், கனரக வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் இந்த விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டுமின்றி இந்ச டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | எகிறியது எண்ணெய் மற்றும் பருப்பு விலை! குடும்பஸ்தர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR