திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை..!!

திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2024, 02:29 PM IST
  • ரம்ஜான் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து.
  • திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை.
  • நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான ஆட்சி அமைந்திட தொழுகை.
திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை..!! title=

திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் மாதம் என்பது மிகவும் சிறப்பான மாதம் இந்த மாதத்தில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவார்கள். இறுதியில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் கொண்டாடப்படும்.

ரம்ஜான் சிறப்பு தொழுகை

அதன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து வருடம் தோறும் ரம்ஜான் சிறப்பு தொழுகையை 300அடி திருப்பரங்குன்றம் மலைமேல் இருக்கக்கூடிய ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகையில் ஈடுபடுவார்கள். 

திருப்பரங்குன்றம் மலைமேல் தொழுகை

திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். எப்போதும் போல் இந்த ஆண்டும் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதி திடல் தொழுகையில் ஈடுபட்டனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான ஆட்சி அமைந்திட தொழுகை

ரமலான் சிறப்பு தொழுகையில் மத நல்லிணக்கத்திற்காகவும், நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான ஆட்சி அமைந்திட வேண்டியும், இயற்கை வளங்கள் செழித்து பஞ்சங்கள் நம்மை விட்டு அகல வேண்டும் என்று சிறப்பு துவா செய்யப்பட்டது இறுதியில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து ரம்ஜான் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டனர்.

புனித மாதமான ரமலான் மாதம்

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கம் , ஏழை மக்களுக்கு தர்மம் வழங்கி கடைப்பிடிப்பதாக உள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | திருச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30 நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள். ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர்.

மேலும் படிக்க | பிரதமர் ரோட் ஷோ மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - அதிமுக ஜெயவர்தன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News