பக்ரீத் பிரியாணிக்கு ரெடி - ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு கல்லா கட்டிய ஆட்டு சந்தை

வேடசந்தூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 7, 2022, 02:10 PM IST
  • பிரியாணிக்கு விற்று தீர்ந்த ஆடு
  • திடகாத்திரமான கிடா ஆடு
  • களைக்கட்டிய அய்யலூர் சந்தை
பக்ரீத் பிரியாணிக்கு ரெடி - ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு கல்லா கட்டிய ஆட்டு சந்தை  title=

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருவார்கள். 

அய்யலூர்,ஆட்டு சந்தை

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இஸ்லாமியர்கள் பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதையொட்டி இன்று அய்யலூரில் கூடிய ஆட்டுச் சந்தை களை கட்டியது. 

அய்யலூர்,ஆட்டு சந்தை

அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது.  வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும் சேவல்களையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது.

அய்யலூர்,ஆட்டு சந்தை

நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 300 முதல் 350 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும், நல்ல திடகாத்திரமான கிடா ஆடுகள் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூபாய் 6000 முதல் 7000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

மேலும் படிக்க | தமிழகத்தில் மாட்டுக்கறிக்கு தடையா? போலீசாரின் செயலால் வலுக்கும் சர்ச்சை!

இது குறித்து வியாபாரிகள் கூறியபோது இன்று ஆட்டுச் சந்தையில்  விற்பனை நல்ல முறையில் இருந்தது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆடுகள் விற்பனைக்கு வந்த விவசாயிகள் கூறியபோது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் தங்கள் கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | சிவாஜி பேர்ல போலி உயில் எழுதி சொத்தை ஏமாத்திட்டாங்க... நடிகர் பிரபு மீது சகோதரிகள் புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News