சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 60 அடியை எட்டி உள்ளது.
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 60 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,383 கன அடியிலிருந்து 18,824 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம்- 60.30 அடியாக உள்ளது, அணையின் நீர் இருப்பு- 24.91 டி.எம்.சி ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.