தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: ஓபிஎஸ் பேட்டி

Last Updated : Apr 19, 2017, 12:31 PM IST
தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: ஓபிஎஸ் பேட்டி title=

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அதிமுக-வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.

அதிமுக அணிகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது:-

அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். எம்ஜிஆர் பாதையில் அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி வந்தார். அதிமுகவில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததில் தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி. தர்ம யுத்தம் தொடரும். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவெடுப்போம் என்றார்.

Trending News