பயப்பட வேண்டாம்! தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படாது

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21 அடியையும், கொள்ளளவு 3000 மில்லியன் கன அடியையும் கடந்து விட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2020, 11:12 AM IST
  • தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
  • பூந்தமல்லி அருகில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடி.
  • 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்படும்.
பயப்பட வேண்டாம்! தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படாது title=

சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன.

செம்பரம்பாக்கம் (Chembarambakkam Lake) ஏரி 21 அடி நிரம்பியுள்ளது. தற்போது ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல தொடர்ந்து 3 நாட்களுக்கு தண்ணீர் வந்தால் 22 அடியை எட்டும். அதே நேரத்தில் நீர் வரத்து  குறையும் பட்சத்தில் 22 அடியை எட்ட மேலும் சில நாட்கள் ஆகலாம்.

சென்னையின் (Chennai) புறநகர் பகுதியில் பூந்தமல்லி அருகில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின்  நீர்மட்டம் 24 அடி. அதன் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21 அடியையும், கொள்ளளவு 3000 மில்லியன் கன அடியையும் கடந்து விட்டன.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால், 2015 ஆம் ஆண்டு நடந்தது போல ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா? என மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

ALSO READ |  சென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை

இந்தநிலையில், செம்பரம்பாக்கம் ஏரி குறித்து தலைமை பொறியாளர் அசோகன் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது. ஏரி 21 அடி நிரம்பியுள்ளது. அதன் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் பிறகே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே மக்கள் அச்சப்பட வேண்டியதிலை.

செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை என்றாலும் கூட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2015 நவம்பர் 17 ஆம் நாள் நடு ராத்திரியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு சென்னையே மூழ்கியது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News