செந்தில் பாலாஜி பைபாஸ் சர்ஜரி... டிஸ்சார்ஜ் எப்போது - நிபுணர் சொல்வது என்ன?

Senthil Balaji Bypass Surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், இந்த சிகிச்சை மேற்கொண்டவர்கள் எப்போது இயல்புக்கு மாறுவார்கள், அவர்கள் எப்போது மருத்துவமனையில் இருந்து செய்யப்படுவார்கள் என்பது குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 21, 2023, 08:32 AM IST
  • மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
  • அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையின் காவலில் உள்ளார்.
  • அவரின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் கோவியட் மனுவை தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜி பைபாஸ் சர்ஜரி...  டிஸ்சார்ஜ் எப்போது - நிபுணர் சொல்வது என்ன? title=

Senthil Balaji Bypass Surgery: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை இன்று நடைபெறுகிறது. மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பைபாஸ் அறுவை சிகிச்சை எப்படி நடைபெறும்? எவ்வளவு நேரம் நடைபெறும்? இருதய மருத்துவ நிபுணர் தரும் தகவல்களை இங்கு காணலாம். 

இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் கூறுகையில்,"பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும். இதில், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். சாதாரணமாக ஒன்று முதல் 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு கொதிப்பில் கொங்கு மண்டலம்...தேர்தலில் எதிரொலிக்கும் - சபாநாயகர்

பைபாஸ் செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். இயல்பு நிலைமைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகும். பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளை பொறுத்து சற்று வேறுபடலாம். பைபாஸ் சிகிச்சை பெற்றவர்களை 7 நாட்களுக்கு பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்வார்கள்.

காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்

முன்னதாக, கடந்த ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவில், சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, அவரை ஓமந்தூரார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இதய இரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்புகள் இருப்பது உறுதியாகியது.

இதனால், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது.

அமலாக்கத்துறை காவலில்...

தொடர்ந்து, அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரை எட்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கும் அனுமதித்த நீதிபதி, மருத்துவமனையிலேயே விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும் அமலாக்கத்துறையினருக்கு உத்தரவிட்டது. 

உச்ச நீதிமன்றத்தில்...

தொடர்ந்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்செய்தது. அதில், "செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறாகும். அவர் அதிகாரமிக்க அமைச்சர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. 

மேலும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய நிலையில், 8 நாட்கள் மருத்துவமனைக்கு வெளியே அழைத்து செல்லாமல் அங்கேயே வைத்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்து. மேலும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, உச்ச நீதிமன்றத்தில் கோவியட் மனுவை தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனுத்தாக்கல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News