நான் கூட "பீஃப் பிரியாணி" சாப்பிடுவேன்.. உணவு என்பது தனி மனித உரிமை -அமைச்சர் மா.சு.,

Chennai Food Festival 2022: உணவு என்பது தனி மனித உரிமை பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 12, 2022, 04:05 PM IST
  • உணவுத் திருவிழாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் உணவு சுவைப்பு.
  • பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
  • உணவு என்பது தனி மனித உரிமை -அமைச்சர் மா சுப்பிரமணியன்
நான் கூட "பீஃப் பிரியாணி" சாப்பிடுவேன்.. உணவு என்பது தனி மனித உரிமை -அமைச்சர் மா.சு., title=

Chennai Food Festival 2022: சென்னை தீவு திடலில் சிங்கார சென்னை உணவு திருவிழா 2022 இன்று தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் துவக்க விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் செயலாளர் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சிங்காரச் சென்னை உணவு திருவிழா" என்ற தலைப்பில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் தமிழகத்தின் பாரம்பரிய உணவு சுவை மிக்க உணவு, உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. 150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு இந்த உணவு கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும் என்றார். மேலும், இந்த உணவுத் திருவிழாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று உணவுகளை சுவைப்பதுடன் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எத்தகைய உணவு முறைகள் தங்கள் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம் எனவும் கூறினார்.

பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு:

செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உணவு பாதுகாப்புத் துறையில் மூன்று அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களின் விற்கும் நடைமுறைக்கு எதிரான விழிப்புணர்வு, உணவுப் பொருட்களின் லேபல்களில் பார்த்து தெரிந்து அறிந்து கொண்ட பிறகு பொருட்களை வாங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என்றார்.  அதேபோல கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மூன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக உப்பின் அளவையும் சர்க்கரையின் அளவையும் சற்றே குறைப்போம் என்று அப்போது உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை பலமுறை பயன்படுத்தினால் அதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்படுத்தும். அதுபோன்ற எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் அதை அரசாங்கமே ஒரு லிட்டருக்கு ரூ. 30 என்று வாங்கிக் கொண்டு அதை மாற்ற பொருளாக பயோடீசல் என்று பயன்படுத்த இருக்கிறோம் என்று அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 23.33 லட்சம் லிட்டர் எண்ணெய் பெரிய நிறுவனங்களிடமிருந்து ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும்,  கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவை அரசு பெற்றுக் கொண்டு பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க: இன்னும் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது - சென்னை உயர்நீதிமன்றம்

உணவு பாதுகாப்பு துறையிலான போட்டியில் வெற்றி பெற்ற மாவட்டங்கள்:

உணவு பாதுகாப்பு துறை மக்களின் உடல்நிலையில் மிகுந்த பாதுகாப்பு காட்டிக்கொண்டு இருக்கிறது என்ற அவர், உணவு தர நிர்ணயத்தில் முதல் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. 150 நாடுகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் குறிப்பாக தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், கோவை, மதுரை, தூத்துக்குடி, ஈரோடு, நெல்லை, காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உணவு பாதுகாப்பு துறையிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.

பீஃப் பிரியாணிக்கு ஏன் அரங்க அமைக்கப்படவில்லை:

இந்த உணவு கண்காட்சியில் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணிக்கு ஏன் அரங்க அமைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்க அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கப்பட்டு இருப்போம் எனத தெரிவித்தார். 

பாரம்பரிய உணவுகளை பயன்படுத்த வேண்டும்:

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறையில் 17 ,18 உட்பிரிவு உள்ளது. அதில் உணவு பாதுகாப்புத் துறையும் ஒன்று. உணவு பாதுகாப்புத் துறையில் கலப்படம் இல்லா உணவு புறந்தள்ளபட்டு பாரம்பரிய உணவுகளை பயன்படுத்த வேண்டும் என்ற அவர், ஆர்கானிக் (organic) உணவுகள் என்று பல்வேறு கடைகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. அதனை உணவு பாதுகாப்புதுறை கண்காணிக்க உத்தரவிட்டு இருக்கிறோம் என்றார். மேலும், துணிந்து தவறு செய்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து மக்களுக்கு தருவது என்ற விஷயத்தை இணி செய்ய மட்டோம் என்று உறுதிமொழியை ஏற்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் படிக்க: கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? பம்பை அகற்றாமல் தார் சாலை போட்ட வினோதம்!!

உயிர் வாழ உணவு அத்தியாவசிய தேவையாக உள்ளது:

மேடையில் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, உணவு உயிர் வாழ அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆனால் தற்பொழுது துரித உணவுகள் அதிகமாக பொது மக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.  பாரம்பரிய உணவுகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அவர், பாரம்பரிய உணவுகளை பயன்படுத்தினால் நோய் இல்லாமல் இருக்கலாம் என தெரிவித்தார்.

எந்த உணவு சாப்பிட்டால் என்ன பயன்:

மேடையில் பேசிய அமைச்சல் சேகர்பாபு, உணவு திருவிழாவில் எந்த உணவு சாப்பிட்டால் என்ன பயன் என்று எங்கு குறிப்பிடவில்லை, அதனை குறிப்பிட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் வைத்தார். மேலும், வாஜ்பாய், அத்வானி, மோடி, சோனியா காந்தி, தமிழக அரசியலில் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் இந்த தீவு திடலில் அரசியல் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த இடத்தில் தற்பொழுது உணவு திருவிழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆச்சி மசாலாவில் சாப்பிட்டால் ருசி இருக்கும் என்று மட்டுமே தெரிவுக்கின்றனர். ஆனால், இந்த பவுடரை சாப்பிட்டால் எந்த நோய் தீரும், என்ன பயன் என்பது போன்று உணவு திருவிழாவில் தெரிவிக்க வேண்டும் என சேகர்பாபு வேண்டுகோள் வைத்தார்.

மேலும் படிக்க: துறைமுக நுழைவாயிலை சரிசெய்து மீனவர்கள் இறப்புகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News