ஜெயலலிதாவின் சிலையிடம் மனு அளித்து, மாணவர்கள் நூதன முறையில் போராட்டம்..!!

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் சிலையிடம் மனு அளித்து மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்து நூதன போராட்டம் நடத்தினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2020, 03:15 PM IST
  • முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் சிலையிடம் மனு அளித்து மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்து நூதன போராட்டம் நடத்தினர்.
  • ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சிலைக்கு அருகில் செல்ல முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்து அவர்கள் பலவந்தமாக கீழே இறக்கப்பட்டனர்
ஜெயலலிதாவின் சிலையிடம் மனு அளித்து,  மாணவர்கள் நூதன முறையில் போராட்டம்..!! title=

தமிழ்நாட்டில், நீட் (NEET ) தேர்வை எதிர்த்து, மாணவர்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள  ஜெயலலிதாவின் சிலைக்கு அருகில் செல்ல முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்து அவர்கள் பலவந்தமாக கீழே கொண்டு வரப்பட்டனர்.

சென்னை: நீட் (NEET ) தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தஞ்சாவூரில் மோதல்கள் நடந்தன. நீட் (NEET ) தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 'மனுவை  ஒப்படைக்க' ஜெயலலிதா சிலைக்கு அருகே இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மறியல் செய்தது. மாணவர்கள் அருகில் செல்வதை தடுக்க போலீசார் விரைந்த போது மோதல் ஏற்பட்டது. 

ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சிலைக்கு அருகில் செல்ல முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்து அவர்கள் பலவந்தமாக கீழே இறக்கப்பட்டனர். இந்த முறையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை கேட்ட போது,  முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் நீட்டை எதிர்த்தார். ஆனால் அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறும், தற்போதைய எடப்பாடி  அரசு,  நீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவரை ஏழு மாநிலங்கள் இதை எதிர்த்து மனௌ தாக்கல் செய்துள்ள நிலையில், மாநில அரசு  ஒரு வழக்கை கூட தாக்கல் செய்யவில்லை எனக் கூறினார். 

ALSO READ | போக்குவரத்து துறை வேலை மோசடி தொடர்பாக சென்னையில் குற்ற பிரிவு போலீஸார் சோதனை..!!!

NEET தேர்வு எழுத இருந்த இரு  மாணவர்கள்  தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, மாணவர்கள் இந்த நூதன போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

Trending News