Tamil: ஹிந்தியை திணிக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்

Anti- Hindi Imposition: தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி! இந்தியை திணிக்கிறவர்கள் இருக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்: சூளுரைத்த தமிழர்கள்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2023, 06:27 AM IST
  • மொழிப்போர் தியாகிகள் தினம்
  • தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி!
  • இந்தி திணிப்புக்கு எதிரான போர் தொடரும்! சூளுரைத்த தமிழர்கள்
Tamil: ஹிந்தியை திணிக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும் title=

சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வீரவணக்கக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்தியை திணிக்கிறவர்கள் இருக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியலூரில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஹிந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி பலர் தனது இன்னுயிரை மாய்த்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவர்களை நினைவு கொள்ளும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது தற்போது தமிழுக்கு எதிராக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது, இதனை எதிர்த்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம் தெரிவித்தார்.

ஹிந்தி திணிப்பில் ஈடுபடுபவர்கள் இருக்கும் வரை இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போர் தொடர்ந்து நடைபெறும் என்று கூறிய அவர், இந்தி திணிப்புக்கு எதிரான போரில் தனது இன்னுயிரை இழந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். தற்போது கூட மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி குடும்பத்தினருக்கு அவர்களின் வறுமை நிலைய கருதி இலவச வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க | திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன: நீதிபதிகள்

தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசு பணி தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே, தமிழ் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அரசு பணி என்ற சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழுக்காகவும் தமிழ் வளர்ச்சிக்கு போராடுவோம் என அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், திமுகவின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல, மதுரையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு தான் எங்கள் நாடு என ஓங்கி உரத்த குரலில் பேசியவர் பெரியார் என்றும், இந்தியை திணிக்க வேண்டும் என நினைத்தால் நாடு துண்டாகும் என பெரியார் எச்சரித்ததை நினைவுகூர்ந்தார்.

ஹிந்தியை திணித்தபோது அறிஞர் அண்ணா உயிரைக்கொடுத்தேனும் ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என உணர்ச்சியூட்டினார். என்றும், அரசியலுக்கு வரும் இளைஞர்கள் தன்னலம் இன்றி பொதுநலத்தோடு பணியாற்றுவது தான் அரசியல் என்பதையும் சுட்டிக்காட்டிய வைகோ, மதிமுக தொண்டர்கள் எதனையும் எதிர்பார்க்காத லட்சியவாதிகள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஏழு மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம்! அசத்தும் கோவையை சேர்ந்த ஸ்ரீவித்யா!

ராஜாஜி பதவி விலகிய பின்னர் ஹிந்தியை மத்திய அரசு திரும்ப பெற்றது, மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்த ஹிந்தி மொழியை அழித்து தமிழில் எழுதி போராட்டம் நடத்தினார்கள் என்றும், ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஹிந்தியை கொண்டுவரமாட்டோம் என நேரு கூறியதையும் வைகோ சுட்டிக்காட்டினார்.

1963ல் ஏப்-13ல் நாடாளுமன்றத்தில் ஹிந்தி தான் ஆட்சிமொழி என கூறி ஆட்சிமொழி மசோதா கொண்டுவந்தபோது, அண்ணா தலைமையில் அரசியல் சட்டத்திற்கு தீ வைத்து கொளுத்தும் போராட்டத்திற்கு கலைஞர் என்னை வழி அனுப்பிவைத்தார், ஹிந்திக்கு ஆட்சிமொழிக்கான தகுதி இல்லை எனவும், அது வேற்றுமையை உருவாக்கும் மொழி என கூறியவர் அறிஞர் அண்ணா என்பதை வைகோ குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் விளையாடிய தயாநிதி Vs உதயநிதி

இப்போது வந்துள்ள ஆபத்து, சனாதான சக்திகள் ஆபத்து சனாதன சக்தி தான் இந்துத்துவா அடிப்படை என கூறிவருகிறது என்று கூறிய வைகோ, சனாதானம் வரும், இந்துத்துவா வரும், இந்திவரும், சமஸ்கிருதம் வரும் இதனை வர விடக்கூடாது என்று கூறினார். தமிழை போற்றுகிறாராம் மோடி என கூறுகின்றனர், மோடி போன்று மக்களை ஏமாற்றுபவர் யாரும் இல்லை என்று தெரிவித்தார். 

பிற இடங்களில் அவர்களுக்கு ஏற்றாற் போல பேசுவார், தமிழை போற்றுகிறீர்கள் என்றால் இங்கு ஹிந்தியை திணிக்க கூடாது என்றும், இந்துத்துவா சக்திகளை சனாதான சக்திகளை தமிழகத்திற்கு நுழைய விடாமல் விரட்டியடிக்க வேண்டும் என்றும் திரு வைகோ மக்களிடம் கேட்டுக் கொண்டார். 

தேவமொழி என கூறி சமஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள், ஆளுநர் தமிழகம் என்கிறார் திடீரென தமிழ்நாடு என கூறுகிறார். தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான கவர்னரை தமிழகம் கண்டதில்லை என்று கூறிய வைகோ, இந்துத்துவா சக்திகளை தமிழகத்திற்கு நுழைய விடக்கூடாது பிடறி தெறிக்க ஓடவிட வேண்டும் என்று கூறிய வைகோ, தமிழ்மொழிக்காக உயிரை நத்த போராளிகளின் மீது ஆணையாக இந்துத்துவாவையும், இந்தியையும் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்தார்.

மேலும் படிக்க | ஆங்கிலத்தை அகற்றி இந்திக்கு அந்த இடத்தை தர பார்க்கிறார்கள் - பாஜக மீது ஸ்டாலின் தாக்கு

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News