G20 Dinner: இரவு விருந்தில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

TN CM MK Stalin In Delhi: ஜி20 மாநாடு விருந்தில் கலந்துக்கொள்ள டெல்லி வந்தடைந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2023, 03:21 PM IST
  • இன்று இரவு 7.30 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார்.
  • ஜி20 விருந்தில் கலந்துக்கொள்வதற்காக தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தடைந்தார்.
  • ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
G20 Dinner: இரவு விருந்தில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் title=

புதுடெல்லி: இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது. இன்றும் (செப்டம்பர் 9) மற்றும் நாளையும் (செப்டம்பர் 10) என இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கலந்துக்கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்த உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அரசியல் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். அதன் வரிசையில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தில் கலந்துக்கொள்வதற்காக டெல்லி வந்தடைந்தார். அவரை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

முன்னதாகவே, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.

மேலும் படிக்க - அரங்கேறியது ‘பாரத்’! இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றுவதற்கான முன்னோட்டமா? அதிர்ச்சி

இரவு விருந்தில் பங்கேற்கும் I.N.D.I.A. கூட்டணி முதல்வர்கள்:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும், கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் உள்ளவர் என்பது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிக் கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் (I.N.D.I.A.) இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களான மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் ஆகியோர் விருந்தில் பங்கேற்ப்பதை உறுதி செய்தனர். 

காங்கிரஸ் மாநில முதல்வர்கள் விருந்துக்கு செல்வார்களா?
ஆனாலும் சில மாநிலத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரவு விருந்தில் கலந்து கொள்ள இயலாது எனத் தெரிவித்துள்ளனர். பல எதிர்க்கட்சி முதல்வர்கள் முன் திட்டமிடப்பட்ட நிகழ்ச்கிகளை மேற்கோள் காட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவைத் தவிர, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்து மற்ற முதல்வர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. முன்னதாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இரவு விருந்தில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து கட்சி நிகழ்ச்சிகளுக்காக முதல்வர் பினராயி விஜயன் செப்டம்பர் 15 ஆம் தேதி டெல்லி செல்கிறார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - ஜி20 மாநாட்டில் தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள்

இந்த மாநில முதல்வர்கள் இரவு விருந்தில் கலந்துக்கொள்ள மாட்டார்கள்:
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநில முதல்வர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார் என அவரது அலுவலக வட்டாரங்கள் உறுதி செய்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்ள மாட்டார். அதேபோல கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் வின் இரவு விருந்தில் கலந்து கொள்ள மாட்டார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.

நாட்டின் 60% மக்களின் தலைவரை மத்திய அரசாங்கம் மதிப்பதில்லை -ராகுல் காந்தி
ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். அந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் இடம் பெறாததால், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தியாவின் 60% மக்களின் தலைவராக உள்ளவரை மோடி அரசாங்கம் மதிப்பதில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

ஜி20 விருந்து பட்டியல்:
ஜி20 தலைவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிரபலமான உணவுகளுடன் நேர்த்தியான விருந்தோம்பல் அளிக்கப்படும். இன்றைய விருந்தில் உலகத் தலைவர்கள் என்ன சாப்பிடுவார்கள் என்ற பட்டியலை தெரிந்துக்கொள்ள கிளிக் (விருந்து பட்டியல்) செய்யவும்.

மேலும் படிக்க - ஜனநாயகம் இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும் -ப.சிதம்பரம் கடும் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News