மு.க.ஸ்டாலின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத டாப் 10 தகவல்கள்!

MK Stalin Birthday, Lesser Known Facts About Him:அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் யார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவரின் சொந்த வாழ்க்கையில் நடந்த டாப் 10 தகவல்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Feb 28, 2023, 03:31 PM IST
  • சாப்பாட்டை பொருத்தவரை வைரமுத்துவின் கவிதை ஒன்றை பின்பற்றுவாராம்.
  • பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுவேன் என்று அந்த கவிதையில் ஒரு வரி வருமாம்.
  • அதனால் வயிறு முட்ட சாப்பிட மாட்டாரம் முதலமைச்சர்.
மு.க.ஸ்டாலின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத டாப் 10 தகவல்கள்!  title=

மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் முதலமைச்சர் ஆகும் கட்டம் இல்லை எனக் கூறி வசைபாடியவர்களுக்கு மே 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் அரியணையில் ஏறி பதிலடி கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.

அரசியலில் அவர் யார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் சொந்த வாழ்க்கையில் மு.க.ஸ்டாலின் பற்றி தெரியாத டாப் 10 தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 

1. மு.க.ஸ்டாலினுக்கு 1975-ம் ஆண்டு துர்கா ஸ்டாலினுடன் திருமணம் நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 22. கலைஞரின் மகன் என்பதால் இவருக்கு பெண் கொடுக்க பலரும் தயங்கிய போது, முரசொலி மாறன் மூலம் தான் இந்த சம்மந்தம் அமைந்தது. பார்த்த முதல் பெண்ணே பிடித்துப் போக திருமணம் செய்து கொண்டார் மு.க.ஸ்டாலின். இவரது திருமணம் முடிந்து சென்னைக்கு துர்கா ஸ்டாலினை அழைத்து வரும் போது, தாய் வீட்டை பிரிந்து வருவதை நினைத்து அழுதாராம். அதற்கு ஸ்டாலினோ, இன்னும் அழ வேண்டியது நிறைய உள்ளது என சொன்னாராம். நிச்சயம் இப்படி யாரும் ஒரு ஆறுதலை புதுப்பெண்ணுக்கு சொல்ல முடியாது. திருமணத்துக்குப் பிறகு தான் மிசா என பல சிக்கல்களில் சிக்கிய மு.க.ஸ்டாலின் அரசியலில் தான் யார் என்பதை கண்டுபிடித்தார். 

2. மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியும் சரி, மகள் செந்தாமரையும் சரி இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் தங்கள் காதலை முதலில் வீட்டில் ஓகே வாங்க தன்னிடம் தான் சொன்னார்களாம். அதோடு இவருக்கு இருவருமே இரண்டு கண்கள் போல இருக்கிறார்கள்.  

மேலும் படிக்க: சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்

3. கலைஞர் கருணாநிதியால்,  ’முத்துவேல் கருணாநிதி எனும் நான் தமிழ்நாடு முதலமைச்சராக’ என்று ஸ்டாலின் பதவியேற்கும் போது  பார்க்கமுடியாமல் போனதால், அடிக்கடி கலைஞர் நினைவிடத்துக்கு சென்று பார்த்து வருவாராம். 

4. ஸ்டாலின் என தான் கலைஞர் எப்போதும் மு.க.ஸ்டாலினை அழைப்பாராம். ஆனால் தாய் வழி உறவினர்கள் பலருக்கும் ஸ்டாலின் என்ற பெயர் வாயில் நுழையாதாம். 

5. இந்த பெயரால் பள்ளியில் சீட் கிடைக்காமல் தவித்துள்ளார். இப்போது பெண்கள் பள்ளியாக மட்டும் இருக்கும் சர்ச் பார்க் முன்பு இருபாலரும் படிக்கும் பள்ளியாக இருந்துள்ளது. அப்போது ரஷ்யாவில் பெரிய புரட்சி நடந்ததால், ஸ்டாலின் என்ற பெயரை மாற்றி வந்தால் சீட் கொடுப்பதாக சொல்லி உள்ளார்களாம். அதற்கு கலைஞர் பள்ளியை வேண்டுமானாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என சொல்லிவிட்டாராம். 

6. உணவைப் பொருத்தவரை தனது மனைவி சமைக்கும் மீன் குழம்பு மிகவும் பிடிக்குமாம். மற்றபடி சைவம் தான் விரும்புவாராம் மு.க.ஸ்டாலின். அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால், அசைவ உணவு அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும் என்பதால் சைவம் மட்டுமே விரும்பி சாப்பிடுவாராம். 

மேலும் படிக்க: தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம், உயிர்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

7. சாப்பாட்டை பொருத்தவரை வைரமுத்துவின் கவிதை ஒன்றை பின்பற்றுவாராம். பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுவேன் என்று அந்த கவிதையில் ஒரு வரி வருமாம். அதனால் வயிறு முட்ட சாப்பிட மாட்டாரம் முதலமைச்சர். 

8. கலைஞர் கட்சி ரீதியாக மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும், நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு கட்சி பணிகள் குறித்து பேசுவாராம். அதேபோல தான் உதயநிதி ஸ்டாலினை இப்போது மு.க.ஸ்டாலின் பாலோ செய்கிறாராம். 

9. ஸ்டாலின் சாப்பிடும் போது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அவர் போன் பேசுவது, வேலை பற்றி யோசிப்பது பிடிக்காதாம். 

10. மு.க.அழகிரி தான் ஸ்டாலினுக்கு ஸ்கூட்டர் ஓட்ட சொல்லிக்கொடுத்தாராம். முதல்முறை கற்றுக்கொண்ட போது கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டாராம் ஸ்டாலின்.

மேலும் படிக்க: "உங்களில் ஒருவன்" 'மோடி, இபிஸ், தாமரை, பாஜக' குறித்த கேள்விகளும் ஸ்டாலின் அளித்த பதில்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News