சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்

CM Stalin’s 70th Birthday Celebrations: முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக அவர் உயர்ந்ததை இந்த புகைப்பட கண்காட்சி விளக்குகிறது. "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2023, 03:11 PM IST
  • "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற பெயரில் புகைப்படக் கண்காட்சி.
  • கருணாநிதி மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்து அவருடன் நட்பு இருந்தது.
  • தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிகளை தமிழர்களே சிலர் செய்கின்றனர்.
சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன் title=

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு பயணம் பற்றி புகைப்படக் கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இளமை காலம் முதல், திமுகவில் அவர் இணைந்த பின் படிப்படியாக அவர் செய்த சாதனைகள் குறித்த புகைப்படங்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனி சிறை அறையும் அமைக்கப்பட்டிருந்தது. 

புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து வந்திருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி திறந்து வைத்திருப்பதாக தெரிவித்தார். 

கருணாநிதி மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்து அவருடன் எனக்கு நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இரண்டு பேரும் நட்பை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் எனக் கூறினார்.

மேலும் படிக்க: "உங்களில் ஒருவன்" 'மோடி, இபிஸ், தாமரை, பாஜக' குறித்த கேள்விகளும் ஸ்டாலின் அளித்த பதில்களும்

ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்து அவர் செய்த சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் அவர் அதனால் சந்தித்த சவால்களையும் இந்த புகைப்பட கண்காட்சி விளக்குவதாக தெரிவித்தார். கட்சியில் ஓர் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக அவர் உயர்ந்ததை இந்த புகைப்பட கண்காட்சி விளக்குவதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத கூடிய முயற்சிகளை தமிழர்களே சிலர் ஈடுபடுவதாக தெரிவித்த அவர், சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டு உள்ளனர். அதற்கு சவால்விடுவது போல் நாம் சரித்திரத்தை நினைவு கொள்ள வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதற்கு தற்போது அதற்கான நேரம் இல்லை எனவும் எந்த ஒரு காட்சியும் படிப்படியாக நடந்தால் தான் சரியாக இருக்கும் என்றும், கிளைமேக்ஸை இப்போதே சொல்ல முடியாது எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க: வெறுப்பு அரசியலை தூண்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது: திருமாவளவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News