TN Election Results: அடம் பிடித்து, சவால் விட்டு களமிறங்கிய பிரேமலதா விஜகாந்தின் நிலை என்ன?

தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் சவால் விட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2021, 12:57 PM IST
  • தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
  • விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பெரும் பின்னடைவு.
  • அமமுக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது தேமுதிக.
TN Election Results: அடம் பிடித்து, சவால் விட்டு களமிறங்கிய பிரேமலதா விஜகாந்தின் நிலை என்ன?  title=

Tamil Nadu Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஏப்ரல் மாதம் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திய கட்சிகளில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் ஒன்றாகும். ஆளும் அதிமுக கட்சியுடன் கூட்டணியிலிருந்த தேமுதிக, கேட்கப்பட்ட தொகுதிகள் கிடைக்காததால், கோவமுற்றது. கொடுக்கப்பட்ட தொகுதிகளை ஏற்க மனமில்லாத தேமுதிக, கூட்டணியிலிருந்து வெளிவருவதாக அறிவித்தது. 

இதைத் தொடர்ந்து, எந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் மேலோங்கி இருந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியில் சேர்ந்தது தேமுதிக.  

15 ஆண்டுகளுக்கு முன்பு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெற்றி பெற்ற கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தற்போது போட்டியிட்டார். 

பல உறுதிகள், பல சவால்கள்

விருத்தாசலத்தில் முகாமிட்டு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரேமலதா விஜயகாந்த். மக்களின் நலனுக்கான பல வாக்குறுதிகளை அளித்தார். தேமுதிகவின் கோட்டையாக விருத்தாச்சலத்தை மாற்றுவதாகவும், கேப்டன் வெற்றி பெற்ற தொகுதியில் லேடி கேப்டனான தானும் வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்றப்போவதாகவும் கூறினார். 

இதுமட்டுமல்லாமல், தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் சவால் விட்டார். 

விருத்தாச்சலத்தில் பின்னடைவு

தமிழகத்தில் கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். சமீபத்திய தகவல்களின் படி பிரேமலதா விஜகாந்த் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

தொண்டர்களிடம் கடுமையான போக்கு

கூட்டணிகள், தொகுதிப் பங்கீடு ஆகியவற்றில் மட்டும் இல்லாமல், கட்சி தொண்டர்களுக்கிடையிலும் பிரேமலதா விஜகாந்த் கடுமையான போக்கையும், பிடிவாதத்தையும் காட்டியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், களப் பணியாளர்களாலும் முழு மனதுடனும், சுதந்திரமாகவும் களப்பணி ஆற்ற முடியவில்லை என கள நிலவரத்தில் காண முடிகிறது.   

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News