தர்மபுரி மாவட்டத்திற்கு எனது மண் எனது மக்கள் பாதயாத்திரை வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மதியம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் யாத்திரியை தொடங்கினார். பின்னர் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திற்கு வந்த அண்ணாமலை அங்குள்ள பாரத மாதா ஆலயத்திற்கு மாலை அணிவித்தார். பின்னர் சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் உள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தியாகி சுப்பிரமணிய சிவா பாரத மாதா கோயில் கட்டுவதற்கு 6 ஏக்கர் நிலத்தினை ரூ.500 க்கு வாங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பாரதமாதா என்றால், திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்கு கெட்ட வார்த்தையாக தெரிகிறது. காவி உடையில் இருக்கும் தாய் தான் பாரதமாதா. இதை கவிஞர் ரவிந்திராநாத் தாகூர், தான் இந்தியா முழுவதும் பாரதமாதா புகைப்படத்தை வெளியிட்டார். இதனை தான் சுப்பிரமணி சிவா இங்கு ஆலயத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று கனவு கண்டார். தியாகி சுப்பிரமணி சிவா கனவு நினைவாகவில்லை. பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க பூட்டை உடைத்தால், கைது செய்யப்பட்டுள்ளனர். அதை நாங்கள் பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். மகாத்மா காந்தி செய்தது, குற்றம் என்றால், நாங்கள் செய்ததும் குற்றம் தான். இந்த இடத்தில் மத்திய அரசு சார்பில் நாங்கள் கோவில் கட்டி கொடுக்கிறோம். இதை தமிழக அரசே, அரசு சொத்தாக பராமரிக்கட்டும். இதில் பாஜகவிற்கு எந்த பெயரும் வேண்டாம்.
இந்த ஆட்சியை பொறுத்த வரையில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிராகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொருத்துவரை பொங்கல் தொகுப்பை வருமாண வரி கட்டுபவர்கள் என்று கட்டுப்பாடுகள் விதித்தால், இன்னும் 10 ஆண்டுகளில் எல்லா குடும்ப அட்டை தாரார்களும், வந்துவிடுவார்கள். மாநில அரசு இந்த போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். அறிவிப்பு செய்ததை, கட்டுப்பாடுகள் விதித்து நிராகரிப்பது, எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. கரும்பு வழங்க கூட கணக்கு பார்க்கிற ஆட்சி இது.
தமிழகத்தில் தற்போது நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சியமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களிள் 10 இலட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு வரவில்லை என்றால், நான் மிகுந்த ஏமாற்றம் அடைவேன். 1996-ம் ஆண்டுலிருந்து, தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய வரிப்பணம் பாக்கி இருந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு எல்லா வரி பணம் பாக்கியையும் கொடுக்க வேண்டும் என சொல்லி, காங்கிரஸ் ஆட்சி கால பாக்கியை கூட கொடுக்க சொன்னார். அதையும் கொடுத்தாகி விட்டது. இதை தமிழக நிதி அமைச்சர் பேசமாட்டீங்கிறாரு. இதுவரை 10, 76,000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி யாரும் பேச கூடாது. யாரும், யாரையும் வஞ்சிக்கவில்லை. மோடி போன்று மாநில உரிமை பேசும் தலைவர்கள் இந்தியாவில் யாருமில்லை." என்று அண்ணாமலை பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ