மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2021, 04:10 PM IST
மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்! title=

Liquor Store News: கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை படுத்தி எடுத்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்க கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு (Coronavirus) எண்ணிக்கை 141 மில்லியனுக்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும், இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது. 

இந்த நிலையில், மதுபானக் கடைகளில் (Liquor Shops) கடையின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை தமிழ்நாடு வாணிபக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில்., 

மதுபான சில்லறை விற்பனை கடைகளில்‌ எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது. இரண்டு வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்‌. அனைத்து மதுபான சிலைறை விற்பனை கடைகளிலும்‌ மேற்பார்வையாளர்கள்‌ பாதுகாப்பு உபகரணங்கள்‌ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்‌. ஒரே நேரத்தில்‌ கடையின்‌ உள்ளே 5 நபர்களுக்கு மேல்‌ இருக்கக்கூடாது.

ALSO READ | டெல்லியில் முழு ஊரடங்கு; மதுக் கடைகளில் அலைமோதும் குடிமக்களின் கூட்டம்!

கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்‌, கடைப்பணியாளர்கள்‌ வேலைநேரத்தில்‌ கிருமிநாசினி திரவத்தை குறைந்தது 5 தடவைகள்‌ குறிப்பிட்ட கால இடைவெளியில்‌ பயன்படுத்த வேண்டும்‌. டாஸ்மாக் கடைகளில் மாஸ்க் அணிந்தால் மட்டுமே மதுபானம் சப்ளை செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு பணியாளர்கள்‌ கடையின்‌ வெளிப்புறம்‌ நின்று மதுபிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்தும்‌, முகக்கவசம். அணிந்து வர செய்தும்‌ விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்‌.

கடைப்பணியாளர்கள்‌ மதுப்பிரியர்களை கடையின்‌ அருகில்‌ மது அருந்த அனுமதிக்காமலும்‌, கடையில்‌ அதிக கூட்டம்‌ சேராமலும்‌, பொது இடங்களில்‌, மது அருந்துவதை தடை செய்தும்‌ பணிபுரிதல்‌ வேண்டும். குறைந்தது 50 வட்டங்கள்‌ சமூக இடைவெளியை பின்பற்றுவதன் பொருட்டு கடையின் எதிரே வரையப்பட்டிருக்க வேண்டும்‌. விலைபட்டியல் ‌ வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும்‌. 21 வயது நீரம்ப பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபானம்‌ விற்பனை செய்தல்‌ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News