தமிழக மாவட்டங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
31.12.2022 முதல் 02.01.2023 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க | திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்து (திருநெல்வேலி) 9, மாஞ்சோலை (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 6, நம்பியார் அணை (திருநெல்வேலி 5, கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) 3, ராமநதி அணைப்பிரிவு (தென்காசி), நாலுமுக்கு (திருநெல்வேலி, பாபநாசம் (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 2, கடனா அணைப்பிரிவு (தென்காசி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கயத்தாறு (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), குண்டாறு அணை (தென்காசி), ஆயிக்குடி (தென்காசி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
மேலும் படிக்க | குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம்! சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ