முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்துசமய அறநிலையத்துறைக்கு பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மத அரசியல் மேலோங்கியிருக்கும் சூழலில் தமிழகத்தில் அந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களும், சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சி பொறுப்பேற்றது உடனே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வந்தபோதும் முறையாக பயிற்சி பெற்ற 56 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
அடுத்ததாக அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது. 47 முதுநிலைக் கோயில்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் கோயிலின் முகப்பில் இருக்கும் பலகையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். விரும்பும் பக்தர்கள் அவர்களை அழைத்து தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். இதுதவிர, மாநிலம் முழுவதும் ஒரு கால பூஜை கூட செய்ய இயலாத கோயில்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்திய தமிழக அரசு, அக்கோயில்களுக்கான வைப்பு நிதியை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. மேலும், ஒரு கால பூஜை செய்திடும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | இனி வீட்டில் இந்த அளவிற்கு மேல் தங்க நகைகள் வைத்திருக்க முடியாது!
திருச்செங்கோடு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல்வேறு மலைக்கோயில்களுக்கு ரோப் கார் வசதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்காக நிதியையும் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. முக்கிய கோயில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் இலவச திருமண திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் அரசு நலத்திட்டங்களில் இது மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் 400க்கும் மேற்பட்ட பழமையான கோயில்களில் குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த கோயில்களின் புனரமைப்பு பணிகள், திருத்தேர் பழுது பார்த்தல், திருக்குளங்கள் புனரமைத்தல் உள்ளிட்டவைக்கு சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் கட்டடங்கள் மீட்டெடுத்தல் ஆகியவற்றில் திமுக அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
மாநிலம் முழுவதும் இருக்கும் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயில் கட்டடங்களை பயன்படுத்தி முறையாக வரி செலுத்தாதவர்கள், நீண்டகாலமாக நிலுவை வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. துறை சார்ந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் மாநிலம் முழுவதும் இருக்கும் சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய பரிசீலித்து வரும் தமிழக அரசு, பக்தர்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்யும் வகையில் (https://hrce.tn.gov.in/hrcehome/index.php) இணைய பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாம், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் திமுகவின் கொள்கை முழக்கங்களுக்கு ஏற்ப, மத அரசியல் மேலோங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறார்.
மேலும் படிக்க | தமிழக இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை அள்ளித்தரும் திமுக அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ