தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த முத்திரை தாள் கட்டணம்! இவ்வளவு உயர்வா?

முத்திரைத்தாள்  கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான சட்ட திருத்த முன்வடிவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பேரவையில் தாக்கல் செய்தார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2023, 06:21 PM IST
  • 20 மேல் முத்திரை தாள் கட்டணம் மாற்றவில்லை.
  • 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாக மாற்றம்.
  • சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த முத்திரை தாள் கட்டணம்! இவ்வளவு உயர்வா? title=

2001 ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றிக்கை அமைக்கப்படவில்லை என்றும், இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக செலவு அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் நூறு ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.

மேலும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறு இல்லை - டிடிவி தினகரன்!

இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும். நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.

moorthi

இந்த மசோதா வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முத்திரை தாள் கட்டணம் இப்படி பல மடங்கு உயர உள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க: ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது திமுக சட்டத்துறை - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News