நாங்கள் கூட்டணி அமைக்க ஊழலற்ற கட்சிகளைக் காணவில்லை, தனித்தே போராடுவோம்: சீமான்

சென்னை ராயப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அனைத்து வேட்பாளர்களையும் மேடையில் அமர வைத்து கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 8, 2021, 10:28 AM IST
  • தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டி முழு வீச்சில் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.
  • நாம் தமிழர் கட்சி சார்பில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர்.
  • லஞ்சம், ஊழல் ஆகியவற்றில் எந்த கட்சிகளும் சளைத்தவர்கள் அல்ல-சீமான்.
நாங்கள் கூட்டணி அமைக்க ஊழலற்ற கட்சிகளைக் காணவில்லை, தனித்தே போராடுவோம்: சீமான்  title=

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டி முழு வீச்சில் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் திருவிழாவின் இந்த தருணத்தில், தொகுதிப் பங்கீடுகளும், தேர்தல் வாக்குறுதிகளும் திநமும் தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகின்றன. திராவிடக் கட்சிகளான திமுக, ஆதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெரும் நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அனைத்து கட்சிகளும் இம்முறை தங்கள் தேர்தல் (Assembly Elections) பிரச்சாரத்திலும், பிரச்சாரம் செய்யும் முறையிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும் பல புதுமைகளை செய்ய நினைப்பது கண்கூடாகத் தெரிகின்றது. ஆனால், இவற்றில் எத்தனை சாத்தியமானவை என்பதில்தான் பெரிய சந்தேகம் எழுகிறது. மாநிலத்தின் நிதி நிலைமையைப் பற்றி புரிந்துகொள்ளாமல், பல புதிய கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பதாக பலர் கருதுகிறார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் (Seeman), தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார். வேறு எந்த கட்சியும் செய்யாத வண்ணம், நாம் தமிழர் கட்சி, வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவிகித இடத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சி சார்பில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர்.

ALSO READ: தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?

நேற்று சென்னை ராயப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் சீமான் அனைத்து வேட்பாளர்களையும் மேடையில் அமர வைத்து கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார். உறுப்பினர்களுக்கு மத்தியில் நின்று உரையாற்றிய சீமான், தனக்கு பிடித்தமான தலைப்புகளை மையமாகக் கொண்டு பேசினார். விவசாயத்தை ஒரு அரசாங்க நிறுவனமாக மாற்றுவது, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆகியவற்றைப் பற்றி அவர் பேசினார். திராவிடக் கட்சிகளின் (Dravidian Parties) கொள்கைகளை விமர்சித்த அவர் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றினார். திமுக தலைவர் மு.க-ஸ்டாலினுக்கு எதிராக தான் கொளத்தூரில் போட்டியிடுவேன் என அவர் முன்னர் தெரிவித்திருந்தாலும், தான் திருவொற்றியூரிலிருந்து போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்தார்.

தனது கட்சியில் பெண் மற்றும் ஆண் வேட்பாளர்களின் சம எண்ணிக்கையைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இது எங்கள் கடமை. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றே நாங்கள் கூறுகிறோம். எங்கள் பெண்கள் சுதந்திரமாக இல்லாவிட்டால் நாங்கள் எங்கள் மண்ணை விடுவிக்க முடியாது" என்றார்.

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காததன் காரணத்தை விளக்கிய சீமான், லஞ்சம், ஊழல் ஆகியவற்றில் எந்த கட்சிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதால், யாரும் அதை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதால், தங்களுக்கு ஏற்ற தகுதியான கூட்டணி எதுவும் இல்லை என்றும், அந்த காரணத்தால் தாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்ததாகவும் கூறினார். "ஒரு தற்காலிக இழப்புக்காக இறுதி வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை. எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. நாங்கள் சத்தியத்திற்காக நிற்கிறோம், நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்றார் அவர்.

"பொறுத்திருந்து பாருங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டால், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தருவேன். நாம் கார்களை ஏற்றுமதி செய்கிறோம், ஆனால், உணவை இறக்குமதி செய்கிறோம். இந்த போக்கை நான் மாற்றியமைப்பேன்” என்று பலரை விமர்சிக்கும் வகையில் அவர் கூறினார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், விவசாய கடன் தள்ளுபடியில் கவனம் செலுத்தினார்களே தவிர, விவசாயிகள் கடனில் சிக்குவதைத் தடுக்க முயற்சிக்கவில்லை என்று விமர்சித்தார் சீமான்.

மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் பாரதிராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ALSO READ: TN Assembly Election இருக்கை பகிர்வு: DMK மற்றும் AIADMK முகாம்களில் என்ன நடக்கிறது?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News