மகளிருக்கு ரூ.29 ஆயிரம் கொடுங்கள்...! அண்ணாமலை போடும் திடீர் குண்டு - ஏன் தெரியுமா?

TN Budget 2023: மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், அதுகுறித்து பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 20, 2023, 02:55 PM IST
  • இதுகுறித்து அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
  • 2.2 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்த உரிமைத்தொகை வழங்க வேண்டும் - அண்ணாமலை
மகளிருக்கு ரூ.29 ஆயிரம் கொடுங்கள்...! அண்ணாமலை போடும் திடீர் குண்டு - ஏன் தெரியுமா? title=

TN Budget 2023 Annamalai Tweet: தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தற்போது அறிவிக்கப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. திமுக அரசு 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆட்சிப்பொறுப்பு இரண்டாண்டு காலம் நிறைவடைய உள்ள நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது. 

மகளிருக்கான உரிமைத்தொகை

அந்த வகையில், மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வரும் நிதியாண்டில், அதாவது முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இத்திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட உடனேயே இதற்கு எதிர்ப்பும் வலுத்தது. அதாவது, தேர்தல் அறிக்கையில், முதலில் இது அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | Tamil Nadu Budget Live: தாக்கல் செய்யப்பட்டது தமிழக பட்ஜெட் 2023! இத்தனை அறிவிப்புகளா?

அண்ணாமலையின் கோரிக்கை!

இதுகுறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில்"ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. 

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மடைமாற்ற வேண்டாம்...

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

இபிஎஸ் எதிர்ப்பு

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,"எதன் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. மேலும், இதற்கு ஒதுக்கியுள்ள நிதியால் சுமார் 1 கோடி மகளிருக்குக் கூட உரிமைத்தொகையை கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை" என கூறியிருந்தார். 

மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை... அரசு ஊழியர்களின் நிலை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News