TN Election Results: எடப்பாடி பழனிச்சாமி அமோக வெற்றி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 2, 2021, 06:12 PM IST
TN Election Results: எடப்பாடி பழனிச்சாமி அமோக வெற்றி title=

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தொடர்ந்து முன்னணியில் இருந்த, எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில்  92,268 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

அதிமுக  வேட்பாளர் முதலமைச்சர் பழனிசாமி பெற்ற வாக்குகள்: 1,60,576

அவரை எதிர்த்து போட்டியிட திமுக வேட்பாளர் சம்பத்குமார் பெற்ற வாக்குகள்: 67,708

இதுவைர வெளியான முடிவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி 92, 266 வாக்கு வித்தியாயசத்தில் வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால், அவரது அமைச்சரவையின் பல அமைச்சர்கள் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர். அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான,  பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க பாண்டியன்  72195 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 68, 737 வாக்குகள் பெற்றுள்ளார். 3458 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 157 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது. 

ALSO READ | TN Election Results:  ஆச்சர்யங்களை அள்ளி தந்துள்ள தமிழக தேர்தல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News