மதுரை ஆதீனம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். 77 வயதான குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2021, 07:05 AM IST
மதுரை ஆதீனம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் title=

மதுரை: புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி அருணகிரிநாத சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 77. சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார். 

மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , “ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன், அவரின் இழப்பு தமிழுலகின் பேரிழப்பாகும் "  எனக் கூறியுள்ளார். 

ALSO READ | Madurai Adheenam: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். ஆழ்ந்த இரங்கல். தமிழுக்கும் - தமிழ் சமூகத்துக்கும் எண்ணற்ற சேவைகளை செய்து தொண்டாற்றி வரும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட மதுரை ஆதீனத்தை சார்ந்தோருக்கு என் ஆறுதல் எனக் கூறியுள்ளார்.

 Also Read | மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துள்ள நித்யானந்தா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News