Tomato Price: ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனையா..? இன்றைய காய்கறி விலை நிலவரம்!

Tomato Price Today in TN Chennai: நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 20, 2023, 09:25 AM IST
  • தக்காளியின் விலை கடந்த மாதம் முதல் உச்சத்தில் இருந்தது.
  • தற்போது அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது.
  • ஒரு கிலோ தக்காளியின் விலை எவ்வளவு தெரியுமா.?
Tomato Price: ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனையா..? இன்றைய காய்கறி விலை நிலவரம்! title=

தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை அதிரடியாக அதிகரித்திருந்தது. இதையடுத்து கோயம்பேட்டில் தக்காளியின் வரத்து சற்றுஅதிகரித்துள்ளதால் அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது. 

மத்திய அரசு உத்தரவு:

தக்காளியை சில்லறை விற்பனையில் இன்று முதல் 70 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று NCCF மற்றும் NAFED ஆகிய துறைகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த சில தினங்களாக தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தக்காளியின் விலை அதிரடி விலை ஏற்றத்தை சந்திதது. தக்காளியின் தொடர் விலை ஏற்றத்தை தடுப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் படி, நேற்று மத்திய அரசு இன்று முதல் டெல்லி உள்பட பிற நகரங்களில் தக்காளி சில்லறை விற்பனையில் கிலோ ஒன்றிற்கு 70 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும் என்ற உத்தரவை இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு வாணிப கூட்டமைப்பு ஆகிவற்றுக்கு மத்திய நுகர்வோர் துறைபிறப்பித்திருக்கிறது. 

மேற்குறிப்பிட்ட இரு அமைப்புகளும் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை வட மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றன. 

மேலும் படிக்க | இதயத்தை உலுக்கும் தக்காளி விலை... 162 ரூபாய் வரை விற்பனை - புதிய உச்சம்!

டெல்லியில் தக்களி விலை குறைவு:

அனைத்து மாநிலங்களிலும் அதிக விலைக்கு விற்கப்பட்ட தக்காளி, கடந்த 14ஆம் தேதி முதல் டெல்லியில் கிலோ ஒன்றுக்கு 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்டு 16ஆம் தேதியிலிருந்து 80 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையான இன்று (ஜூலை 20) தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 70 ரூபாயாக வைத்து விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு:

வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் தக்காளிக்கு தமிழ் நாட்டிலும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால்தான் எல்லா இடங்களிலும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல சந்தையான கோயம்பேட்டில் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது . நேற்றைய நிலவரப்படி, தக்காளியின் விலை கிலோ ஒன்றிற்கு 30 ரூபாய் குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சில்லறை விற்பனையின் தக்காளி கிலோவுக்கு 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது வட மாநிலங்களில் தக்காளியின் விலை 70 ரூபாய்க்கு விற்கப்படுவதை தொடர்ந்து, தமிழ் நாட்டிலும் நாளையிலிருந்து விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம்:

கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ. 

-அவரக்காய்-கிலோ ஒன்றிற்கு சுமார் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட் மற்றும் கத்திரிக்காய் கிலோ ஒன்றிற்கு தலா 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

-பச்சை குடைமிளகாய் கிலோவுக்கு 80 ரூபாயும் சிகப்பு குடைமிளகாய் கிலோ ஒன்றிற்கு 180 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

-கேரட் ஒரு கிலோவுக்கு 50 ரூபாயாகவும் பீன்ஸ் ஒருகிலோவுக்கு சுமார் 70 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

-பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு சுமார் 22-25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

-நாட்டுத்தக்காளி கிலோ ஒன்றிற்க் 100 ரூபாய்க்கும், பெங்களூர் தக்காளி ஒரு கிலோவிற்கு 130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

-சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 30 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘அப்பாடா..’ தமிழகத்தில் தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ இவ்வளவுதானா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News