மீண்டும் தொடங்கியது சென்னை - தூத்துக்குடி ரயில் சேவை! முழு விவரம்!

Chenani to thoothukudi Train: 5 நாட்களுக்குப் பின் முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Dec 22, 2023, 09:11 AM IST
  • தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை.
  • ரயில் தண்டவாளங்களில் தேங்கிய மழை நீர்.
  • 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை.
மீண்டும் தொடங்கியது சென்னை - தூத்துக்குடி ரயில் சேவை! முழு விவரம்! title=

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து சென்னையிலிருந்து முத்துநகர் விரைவு ரயில் கடந்த ஐந்து நாட்களுக்குப்பின் இன்று காலை  வந்தடைந்தது.  தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 17ஆம் தேதி பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை நீர் வெள்ளம் போல் சென்றது. தூத்துக்குடி ரயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மாலை நீர் சூழ்ந்தது, இதன் காரணமாக கடந்த 15ஆம் தேதி முதல் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு!

இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது, இதில் வந்த பயணிகள் தாங்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.  தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தூத்துகுடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு சட்டக்கல்லூரி சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளே உணவு தயார் செய்து அனுப்பி வைத்தனர்.  பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி பொருட்களை அனுப்பி வருகின்றனர்.  இதனையடுத்து தூத்துகுடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஈரோடு சட்டக்கல்லூரி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாணவ மாணவிகள் சப்பாத்திகளை தயார் செய்து வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சட்டகல்லூரியின் தாளாளர் சிந்துரவிசந்திரன் முதல்வர் கிஷோர் தலைமையில் ஈரோடு சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சப்பாத்தி உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

பணியின்போது சப்பாத்தி மாவை பிசைந்து இலட்சகணக்கான சப்பாத்திகளை சமைத்து உணவு பொட்டலங்களாக மாற்றினர். இதையடுத்து தயார் செய்யப்பட்ட சப்பாத்திகளுடன், பால் பவுடர், பிஸ்கட், மற்றும் உடைகளுடன் கூடிய நிவாரண பொருட்களை வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பினர். வெள்ளத்தால் பாதித்த பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வரும் நிலையில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ஈரோடு சட்டக்கல்லூரி மாணவ மாணவிகளே சப்பாத்தி உணவை தயார் செய்து அனுப்பியதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | யார் இந்த பொன்முடி? பகுதிநேர பேராசியர் டூ அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News