மூக்கை நுழைக்க வேண்டாம்! அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அதிமுக ஜெயக்குமார்

Sasikala vs D Jayakumar: அதிமுகவில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 17, 2023, 02:51 PM IST
  • அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என பேசுவதற்கு சசிகலா யார்?
  • சசிகலா, டி.டி.வி. தினகரன், ஒ.பி.எஸ் இணைந்து தனிகட்சி
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் நல்ல விசயம். மக்களும் அதை எதிர்பார்க்கிறார்கள்.
மூக்கை நுழைக்க வேண்டாம்! அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அதிமுக ஜெயக்குமார்  title=

Tamil Nadu News: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் குறித்து புகழாரம்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "முடி சூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்" எம் ஜி ஆர் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.தற்போது வருகிற பாடல்கள் எல்லாம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் சிலருக்கு அறிவு வளரவில்லை. ஆள் மட்டும் உயரமாக இருக்கிறார்கள் என கூறிய ஜெயக்குமாரிடம் யார் என்று கேள்வி எழுப்பியதற்கு நான் எப்பொழுதும் யாரை திட்டுவேனோ அவர்தான் என மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

"சத்தியம் தவறாது உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையில் கொள்ளை அடிக்கிரான்" என்ற பாடலை பாடி திமுக நாட்டை கொள்ளை அடிக்கிறது என விமர்சனம் செய்தார். திமுகவை 13 வருடம் தலை தூக்க விடமால் வன வாசம் அனுப்பியவர் எம்.ஜி.ஆர் என புகழாரம் சூட்டினார்.

நாட்டுகாக எண்ணற்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இலவச மின்சாரத்திற்கு முன்னோடி எம்.ஜி.ஆர். தான். அவர் தான் அந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் எனக் கூறினார். 

மேலும் படிக்க: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள்: மனங்களை விட்டு விலகாத ‘மக்கள் திலகம்’

சசிகலா, டி.டி.வி. தினகரன், ஒ.பி.எஸ் இணைந்து தனி கட்சி

தொடர்ந்து பேசிய அவர்,  அதிமுகவை ஒருங்கிணைக்க ஈபிஎஸ் ஓபிஎஸ்சை விரைவில் சந்திக்க இருப்பதாக சசிகலா கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, "சசிகலா ஆயிரம் கருத்தை சொல்லலாம். அதை யாரும் பொருட் படுத்த முடியாது. பெரிதாக எடுத்து கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சீரும் சிறப்புமாக எழுச்சியோடு இருக்கிறது.

அவங்க யார் இதை பேசுவதற்கு? என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், டி.டி.வி. தினகரன், ஒ.பி.எஸ் ஆகியோரை வேண்டுமானால் ஒருங்கிணைத்து மூவரும் ஒரு தனி கட்சி ஆரம்பிக்கலாம் அது நல்ல விசயம். அதற்கு நாங்கள் குறுக்க நிற்க மாட்டோம்.

எங்கள் கட்சியில் (அதிமுக) சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம் கட்சியில் தொண்டர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கும் நிலையில் இது போன்ற கருத்துக்களை சசிகலா கூறுவதை தொண்டர்கள் தேவையில்லாத கருத்தாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.

மேலும் படிக்க: திமுகவுக்கு திரும்புகிறாரா மு.க. அழகிரி... உதயநிதி சந்திப்புக்கு பின் தகவல்

ஒ.பி .எஸ் ஒரு சுயநலவாதி

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அழைப்பு வந்தது தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ரிமோட் ஓட்டிங் முறைக்கு நாங்கள் செல்லாததற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை என விளக்கம் அளித்தார். 

ஓபிஎஸ் தரப்பில் சென்று இருக்கிறார்கள் என்று கேள்விக்கு, அவர்கள் சுயேசையாக கூட சென்று இருப்பார்கள் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இடைக்கால பொது செயலாளர் என்று எங்களுக்கு கடிதம் வந்திருந்தால் நாங்கள் ரிமோட் ஒட்டு செலுத்தும் முறையில் கலந்து கொண்டிருப்போம்.

அவர்களுக்கும் (ஒ.பி.எஸ், சசிகலா) எங்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை. ஒ.பி.எஸ் ஒரு சுயநலவாதி. நானும் இருக்கிறேன் என்று காட்டி கொள்கிறார். அவர்கள் மூவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒ.பி.எஸ் கருத்தை தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

மேலும் படிக்க: சிறுமலை வன கிராமங்களில் விவசாயிகள் கொண்டாடிய ‘குதிரை பொங்கல்’

அமைச்சர் உதயநிதி முக அழகிரி சந்தித்தது குறித்த கேள்விக்கு,

கருணாநிதிக்கு பிறகு திமுக குடும்பமே கழகம் என ஆகி விட்டது. அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் தைரியமாக மதுரை சென்றார். ஆனால் கருணாநிதி ஆட்சியில் ஸ்டாலின் மதுரை செல்ல வில்லை. அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருந்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் - அதிமுக ஆதரிக்கும்

ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல விசயம். 2024-ல் ஒரே தேர்தல் வந்தால் மக்களுக்கு நல்ல விசயம். மக்களும் அதை எதிர்பார்க்கிறார்கள் ஒவ்வொரு தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது. ஒரு கட்சி தவிர மற்ற எல்லா கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தான். ஒரு கட்சி திமுகவிற்கு மட்டும் வயிற்றில் புளிய கரைக்கும்.

திமுக அரசு மீது விமர்சனம்

2 வருடம் முடியும் நிலையில் தேர்தல் வாக்குறுதி குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய், நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து எல்லாம் அம்பேல் என விமர்சனம். தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போட்ட அரசு திமுக அரசு என விமர்சனம் செய்தார்.

மேலும் படிக்க: கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி அட்ராசிட்டி செய்த பெண்: தருமபுரியில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News