கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி அட்ராசிட்டி செய்த பெண்: தருமபுரியில் பரபரப்பு

Tamil Nadu: சுப்ரமணியின்  வீட்டை விட்டு வெளியேறிய சுமதி கோபிநாதம்பட்டி கூட்ரோட்டியில் உள்ள செல்போன் டவரில் ஏறி சுப்ரமணியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் நகையை மீட்டு தர கோரியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 16, 2023, 04:13 PM IST
  • கள்ளக்காதலனுடன் சேர பெண் செய்த வினோத வேலை.
  • செல் போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.
  • தருமபுரியில் பரபரப்பு.
கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி அட்ராசிட்டி செய்த பெண்: தருமபுரியில் பரபரப்பு title=

கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி  மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சுமதி (39). இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ள நிலையில் பி.துறிஞ்சிப்பட்டியில் சுமதி தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில், கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சுப்ரமணி (35) என்பவருடன் சேர்ந்து சுமதி கோவை சூளூரில் தங்கி செல்போன் டவர் அமைக்கும் பணியினை கடந்த ஒன்றரை வருடங்களாக செய்து வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று பொங்கலுக்கு கோபிநாதம்பட்டி கூட்ரோடிற்கு வந்துள்ளனர்.

அப்போது கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள சுப்ரமணி வீட்டில்  இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியாக தெரிகிறது. அங்கு சுமதி சுப்ரமணியிடம், தன்னிடம் இருந்து வாங்கிய அரைப் பவுன் நகையை திரும்ப தரவேண்டும் எனவும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறியுள்ளார்.  

மேலும் படிக்க | உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா! நடனத்தால் அசத்திய படுகரின மக்கள்!

இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சுப்ரமணியின் வீட்டை விட்டு வெளியேறிய சுமதி கோபிநாதம்பட்டி  கூட்ரோட்டியில் உள்ள செல்போன் டவரில் ஏறி சுப்ரமணியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் நகையை மீட்டு தர கோரியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் துறையினர் மது போதையில் இருந்த சுமதியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மதுபோதையில் இருந்த சுமதி தன்னை தன் காதலன் சுப்ரமணியுடன் சேர்த்து வையுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனக்கு சேர வேண்டிய நகையை வாங்கி தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

சுமதி ஏற்கனவே இதே போல் கோவையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்து நேரில் பேசினார் என தெரிவித்து அவர் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | Palamedu Jallikattu 2023: சோகத்தில் வாடிவாசல்... காளை தாக்கியதில் பலியான நட்சத்திர வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News