உலக முட்டை தினம்: நாமக்கல்லில் 10,000 முட்டைகள் இலவசமாக விநியோகம்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பொதுமக்களுக்கு 10,000 முட்டைகள் இலவசமாக இன்று விநியோகிக்கப்பட்டன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 14, 2022, 04:56 PM IST
  • சுவாரசியங்கள் நிறைந்த உலக முட்டை தினம்
  • சர்வதேச முட்டை தின விழா
உலக முட்டை தினம்: நாமக்கல்லில் 10,000 முட்டைகள் இலவசமாக விநியோகம் title=

உலக முட்டை தினம் 1996 ஆம் ஆண்டு வியன்னாவில் நிறுவப்பட்டது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் இரண்டாவது வெள்ளிக்கிழமை முட்டையின் சக்தியைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து, உலகெங்கிலும் உள்ள முட்டை ரசிகர்கள் இந்த நம்பமுடியாத ஊட்டச்சத்து சக்தியை மதிக்க புதிய படைப்பு வழிகளை யோசித்தனர், மேலும் கொண்டாட்ட நாள் வளர்ந்து காலப்போக்கில் வளர்ந்துள்ளது. அதன்படி உலகம் முழுவது அக்டோபர் 14-ஆம் தேதி உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துக்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் முட்டைகள் டன் டன்னாக அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 கோடி முட்டையின கோழிகள் மூலம் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் தமிழகம், புதுவை, கேரளா மற்றும் வடமாநிலங்களில் சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது, முட்டையின் கொள்முதல் விலையை,  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. முட்டையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, டி, இ, பி12, புரோட்டீன், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

மேலும் படிக்க | நடந்தே எடையை குறைக்கலாம்!! ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?

உலக முட்டை தினத்தையொட்டி, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் , நாமக்கல்லில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சிங்கராஜ், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு 10 ஆயிரம் அவித்த முட்டைகளை இலவசமாக விநியோகம் செய்தனர்.

முட்டையின் நன்மைகள்
முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். எனென்றால் முட்டையில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. 

முட்டையிலிருக்கும் கோலின் சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தை, மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உதவும்.

மேலும் படிக்க | Cholesterol Level: வயதிற்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News