Cholesterol Level: வயதிற்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

Cholesterol Level: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​அது பல வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.  வயதுக்கு ஏற்ப உங்கள் கொலஸ்ட்ரால் அளவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2022, 07:17 PM IST
  • கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?
  • மக்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சரியான கொலஸ்ட்ரால் அளவை அறிந்து கொள்ள வேண்டும்.
  • உங்கள் வயதுக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
Cholesterol Level: வயதிற்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?  title=

தவறான உணவுப்பழக்கம் மற்றும் பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, மக்களுக்கு கடுமையான நோய்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கடுமையான நோய்களில் ஒன்று கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு ஆகும். கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் மெழுகு போன்ற பொருள். கொலஸ்ட்ரால் நமது உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பை செரிக்கச் செய்வதோடு புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. ஆனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​அது பல வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இதய நோய்களின் அபாயமும் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதே போல் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால், உடலில் இரத்த ஓட்டமும் குறைகிறது, இதன் காரணமாக சருமத்தின் நிறம் மஞ்சளாக மாறத் தொடங்குகிறது. அதனால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். ஆனால் வயதுக்கு ஏற்ப கொலஸ்ட்ராலின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்ற புரிதல் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. வயதுக்கு ஏற்ப உங்கள் கொலஸ்ட்ரால் அளவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | Cholesterol Diet: கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த மேஜிக் பழங்களை உட்கொண்டால் போதும் 

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள்: 

- தவறான உணவு முறை.

- அதிக எடை அதிகரிப்பு.

- உடல் உழைப்பு இல்லாமை.

- உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை காரணமாக.

- நீரிழிவு நோய்.

வயதுக்கு ஏற்ப கொலஸ்ட்ராலின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

மக்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சரியான கொலஸ்ட்ரால் அளவை அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவைக் கருத்தில் கொண்டு அவர்கள் தங்களது உணவு மற்றும் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள முடியும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தவிர, கொலஸ்ட்ரால் அளவை அவ்வப்போது பரிசோதிப்பதும் அவசியம் என்று கருதப்படுகிறது. உங்கள் வயதுக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை இங்கே காணலாம். 

19 அல்லது அதற்கு குறைவான வயதில்

- மொத்த கொலஸ்ட்ரால் அளவு -170 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்

- LDL -100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்

- HDL - 45 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்

20 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு

- மொத்த கொலஸ்ட்ரால் அளவு - 125 முதல் 200 mg/dl

- LDL - 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்

- HDL - 50 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்

20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 

- மொத்த கொலஸ்ட்ரால் அளவு -125 முதல் 200 mg/dl

 - LDL - 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்

 - HDL -40 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்

(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இவை அவசியம்: இன்றே உணவில் சேருங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News